ஹோம் /நியூஸ் /கரூர் /

காதல் ரோஜாவே... பாட்டு பாடிய தாயை பார்த்து ரசித்த குழந்தை - வைரல் வீடியோ

காதல் ரோஜாவே... பாட்டு பாடிய தாயை பார்த்து ரசித்த குழந்தை - வைரல் வீடியோ

தாயின் பாடலை ரசித்து கேட்ட குழந்தை

தாயின் பாடலை ரசித்து கேட்ட குழந்தை

தாய் பாடல் பாடும் போது மட்டும் தாயை அன்னார்ந்து பார்க்கும் அழகான குழந்தை வீடியோ வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Karur | karur

  கரூரில் பாட்டு பாடும் தாயை மடியில் படுத்த படி ரசித்து பார்த்த 4 மாத குழந்தையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  பாட்டுக்கு மயங்காதோர் இந்த உலகத்தில் யாருமே இல்லை. சந்தோஷம், கவலை, கண்ணீர் என அனைத்திற்குமே ஒரு பாடல் மருந்தாகும். கடந்த சில வருடங்களுக்கு முன்பாக கண்ணாலனே பாடல் பாடிய தாயுடன் சேர்ந்து குழந்தையும் பாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  அந்த வகையில் தனது தாயின் பாடலை கேட்டு உன்னிப்பாக கவனித்து க்யூட்டாக ரியாக்சன் கொடுக்கும் 4 மாத குழந்தையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு பகுதியை சேர்ந்த சக்தி என்ற பெண், தன் 4 மாத ஆண் குழந்தை கவிஸை தன் மடியில் படுக்க வைத்து ஏ.ஆர்.ரகுமானின் காதல் ரோஜாவே பாடலின் ஹம்மிங்கை அழகாக பாடுகிறார். அக்குழந்தையும் ஆர்வமுடன் அந்த ஹம்மிங்கை கவனித்து சிரித்த படி க்யூட்டான ரியாக்சன் கொடுக்கிறது.

  அம்மா பாடும் போது அன்னார்ந்து வியப்பாக பார்த்து சிரித்த இந்த குழந்தையின் வீடியோ பலரையும் ரசிக்க செய்கிறது.

  செய்தியாளர்: தி.கார்த்திகேயன், கரூர்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Baby, Karur, Viral Video