முகப்பு /செய்தி /கரூர் / நர்சிங் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிமுக பிரமுகர் உட்பட 3 பேர் போக்சோவில் கைது...

நர்சிங் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிமுக பிரமுகர் உட்பட 3 பேர் போக்சோவில் கைது...

தனியார் நர்சிங் கல்லூரி

தனியார் நர்சிங் கல்லூரி

குளித்தலையில் தனியார் நர்சிங் கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த அதிமுக பிரமுகரும்,  கல்லூரி முதல்வரும்,  முன்னாள் அரசு வழக்கறிஞருமான செந்தில்குமார்  மற்றும் விடுதி காப்பாளர் அமுதவல்லியை தனிப்படை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Karur, India

கரூர் மாவட்டம், குளித்தலை ரயில் நிலையம் அருகே கடந்த 20 ஆண்டுகளாக தனியார் நர்சிங் கல்லூரி விடுதி வசதியுடன் செயல்பட்டு வருகிறது. விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படிக்கும் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு கல்லூரி முதல்வரும், அதிமுக பிரமுகரும் முன்னாள் அரசு வழக்கறிஞருமான செந்தில்குமார் அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து சில்மிஷம் செய்துள்ளார்.

அச்சிறுமி அவரது ஆசைக்கு இணங்க மறுத்து வந்துள்ளார்.  கல்லூரி விடுதியில் பணியில் இருந்து வரும் அமுதவல்லி, சமையலர் ஆக வேலை பார்த்து வரும் மணப்பாறையை சேர்ந்த மகாலட்சுமி  ஆகிய இருவரும் சேர்ந்து கொண்டு நர்சிங் தாளாளர் செந்தில்குமாரின் ஆசைக்கு இணங்க மறுத்தால் உனது படிப்பு சான்றிதழ் வழங்க மாட்டோம் என்றும் உன்னை திருட்டு பெண் என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்து உன் வாழ்க்கையை காலி செய்துவிடுவோம் எனவும் மிரட்டியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி தனது பெற்றோரிடம் நடந்தவை  குறித்து தெரிவித்துள்ளார். அச்சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து கரூர் மாவட்ட எஸ்பியிடம் அளித்த புகாரின் பேரில் குளித்தலை மகளிர் போலீசார் விசாரணை செய்து அதிமுக பிரமுகரும், முன்னாள் அரசு வழக்கறிஞருமான செந்தில்குமார் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அமுதவல்லி, மகாலட்சுமி ஆகிய மூவர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Also see... அண்ணன், தம்பியாக இருந்த ஓபிஎஸ் - இபிஎஸ் மோதலுக்கு இவர்கள்தான் காரணம்.. மார்க்சிஸ்ட் கட்சி பாலபாரதி குற்றச்சாட்டு

இது குறித்து முன்கூட்டியே அறிந்த அதிமுக பிரமுகர் செந்தில்குமார் அமுதவல்லி, மகாலட்சுமி ஆகிய மூவரும் தலைமறைவாகிவிட்டனர்.

இதில் விடுதி சமையலர் மகாலட்சுமி கடந்த மே 27ஆம் தேதி போலீசார் மணப்பாறையில் வைத்து கைது செய்தனர்.

மேலும் தலைமறைவாக இருந்த செந்தில்குமார் மற்றும் விடுதி காப்பாளர் அமுதவள்ளியை தனிப்படை போலீசார் கடந்த இரண்டு மாதங்களாக தேடி வந்தனர்.

இந்நிலையில் அவர்கள் இருவரும் மேல்மருவத்தூரில் தங்கி இருப்பது தெரியவந்ததையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து அவர்கள் இருவரையும் கைது செய்து குளித்தலை மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் கரூர் மகிளா நீதிமன்றத்தில் இருவரும் ஆஜர் படுத்தப்பட்ட பின் சிறையில் அடைக்கப்பட்டனர்.

நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்த 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த பள்ளி தாளாளரும், அதிமுக முன்னாள் அரசு வழக்கறிஞருமான செந்தில்குமார் கைது செய்யப்பட்ட சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

செய்தியாளர்: தி.கார்த்திகேயன்,கரூர்

First published:

Tags: Karur, POCSO case, Sexual harassment