ஹோம் /நியூஸ் /கரூர் /

கரூரில் விஷவாயு தாக்கி மூவர் இறந்த சம்பவத்தில் அதிர்ச்சி தகவல்.. மேலும் ஒருவரின் உடல் இன்று கண்டெடுப்பு

கரூரில் விஷவாயு தாக்கி மூவர் இறந்த சம்பவத்தில் அதிர்ச்சி தகவல்.. மேலும் ஒருவரின் உடல் இன்று கண்டெடுப்பு

கழிவுநீர் தொட்டியில் கோபால் உடல் மீட்கப்படுகிறது

கழிவுநீர் தொட்டியில் கோபால் உடல் மீட்கப்படுகிறது

Karur News : கழிவுநீர் தொட்டியில் உள்ள தண்ணீரை பைப் மூலம் வெளியேற்றும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Karur, India

  கரூர் அடுத்த சுக்காலியூர், காந்தி நகர் பகுதியில் குணசேகரன் என்பவரின் புதிய வீடு ஒன்று கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புதிதாக கழிவுநீர் தொட்டி கட்டி முடிக்கப்பட்டது. கட்டி முடிக்கப்பட்ட அந்த கழிவுநீர் தொட்டியில் இறங்கி கான்கிரீட்  மரங்கள் மற்றும் பலகைகளை அகற்றுவதற்காக அந்த தொட்டியில் தொழிலாளர் சிவா இறங்கி உள்ளனர்.

  அப்போது அலறல் சத்தத்தை கேட்டு அருகில் கட்டிடத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த மோன்ராஜ்,  சிவகுமார்  இருவரும் உள்ளே இறங்கி உள்ளனர். இதில் மூன்று பேரும் மயக்கம் அடைந்துள்ளனர்.

  தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த கரூர் தீயணைப்பு துறையினர் மூன்று பேரையும் மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மூவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டார்கள் என்று தெரிவித்தனர்.

  இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த கரூர் காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம், சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். முதற்கட்ட விசாரணையில் அதிக ஆழம் கொண்ட தொட்டியில் மழை நீர் முழங்கால் அளவு தண்ணீர் இருந்ததாகவும், சவுக்கு குச்சிகள் உப்பி தேங்கிய நீரில் விஷ வாயு உருவாகி இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

  இதையும் படிங்க : கோவையில் வாக்கிங் சென்ற பெண்ணை தாக்கிய காட்டுயானை

  இதற்கிடையில், அஜாக்கிரதையாக செயல்பட்ட கட்டிட உரிமையாளர் வழக்கறிஞர் குணசேகரன் மற்றும் கட்டிட மேஸ்திரி என இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

  இந்நிலையில், அதே கட்டிடத்தில் வேலை பார்த்த  சின்னமலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கோபால்(36), என்ற இளைஞர் இரண்டு நாட்களாக வீட்டிற்கு வராத நிலையில், அவரது சகோதர சரவணன் என்பவர் நேரடியாக வந்து கட்டிடத்தில் பார்த்தபோது அவர் அணிந்திருந்த காலணி மற்றும் இருசக்கர வாகனம் இருந்த நிலையில் இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

  இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் உள்ளே பார்த்தபோது கோபால் உள்ளே இறந்த நிலையில் கிடப்பது தெரியவந்தது, கழிவுநீர் தொட்டியில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் இருந்ததால் உடல் தெரியாத நிலையில் இன்று மிதந்து மேலே வந்த நிலையில் அவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

  குறிப்பாக நேற்று முன்தினம்  விஷவாயு தாக்கி  மூவரின் உடலை கைப்பற்றப்பட்ட நிலையில் இன்று மேலும் ஒருவரின் உடலை கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் கரூர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மேலும் கழிவுநீர் தொட்டியில் உள்ள தண்ணீரை பைப் மூலம் வெளியேற்றும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

  செய்தியாளர் : கார்த்திகேயன் - கரூர்.

  Published by:Karthi K
  First published:

  Tags: Crime News, Karur