ஹோம் /நியூஸ் /கரூர் /

16 வயது சிறுமியை 6 மாதங்களாக பாலியல் வன்கொடுமை காதலன், சித்தப்பா.. கரூரில் அதிர்ச்சி சம்பவம்!

16 வயது சிறுமியை 6 மாதங்களாக பாலியல் வன்கொடுமை காதலன், சித்தப்பா.. கரூரில் அதிர்ச்சி சம்பவம்!

கைது செய்யப்பட்டவர்கள்

கைது செய்யப்பட்டவர்கள்

சிறுமியை 6 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை  குளித்தலை மகளிர் போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Karur, India

குளித்தலை அருகே கோட்டக்கரையான் பட்டியில் 16 வயது சிறுமியை கடந்த 6 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்த சிறுமியின் காதலன், சித்தப்பா உட்பட 3 பேரை  குளித்தலை மகளிர் போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி தரகம்பட்டி அருகே கோட்டக்கரையான்பட்டியில் உள்ள தனது தாத்தா வீட்டில் வசித்து வருகிறார். கடந்த ஜூன் மாதம்  6ம் தேதி அருகில் உள்ள சோளக்காட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த செங்குளத்தைச் சேர்ந்த பெரியசாமி (60) என்பவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதையும் படிக்க :  வாட்ஸ் அப் வீடியோகால்.. மாணவியை நிர்வாணமாக வரச்சொன்ன இளைஞர்.. தேடிப்பிடித்து கைது செய்த போலீஸ்!

இதனை கண்ட சிறுமியின் சித்தப்பா இடும்பன் (31), பெரியசாமி விரட்டிவிட்டு தனது மகள் முறை என்றும் பாராமல் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சஞ்சீவ் என்பவருக்கும் சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அவரும் சிறுமியிடம் பாலியல் ரீதியாக உடலுறவு வைத்துள்ளார். கடந்த ஆறு மாதங்களாக இவர்கள் 3 பேரும் சிறுமியை பாலியல் ரீதியாக பலவந்தமாக உடலுறவு கொண்டுள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவல் கிடைத்தவுடன் அவர் அங்கு சென்று சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டதில் கடந்த ஆறு மாதங்களாக இவர்கள் 3 பேரும்  பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்து வந்தது தெரிய வந்தது.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மகளிர் போலீசார், அவர்கள் 3 பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் மூன்று பேரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் கரூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் கிளை சிறையில் அடைத்தனர்.

First published:

Tags: Crime News, Karur, Pocso, POCSO case, Sexual abuse