ஹோம் /நியூஸ் /கரூர் /

கரூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து 2 வயது குழந்தை பலி - தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றபோது சோகம்

கரூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து 2 வயது குழந்தை பலி - தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றபோது சோகம்

கார் விபத்து

கார் விபத்து

Karur Accident | கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை மணவாசி டோல்பிளாசா அருகே  வந்தபோது. அப்பகுதியில் சாலை மேடு பள்ளமாக பழுதடைந்திருந்ததால்,  திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து 15 அடி பள்ளத்தில் கார் உருண்டு கவிழ்ந்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Karur, India

  கரூர் அருகே தேசிய நெடுஞ்சாலை மேடு பள்ளமாக இருந்ததால் சென்னையிலிருந்து கரூர் வந்த குடும்பத்தினரின் கார் நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்துக்கு உள்ளானது. இதில் 2 வயது  குழந்தை பலியானது. மேலும் கணவன், மனைவி படுகாயமடைந்தனர்.

  கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் சுதாகர்(34), இவர் சென்னையில் ஒரு ஐ.டி கம்பெனில் பணியாற்றி வருகிறார்.  இவரது மனைவி கீர்த்தனா(30), இவர்களது குழந்தை சுஷ்மிதா(2). இவர்கள் மூன்று பேரும் நேற்று இரவு தீபாவளிக்கு சொந்த ஊரான கரூர் வருவதற்கு தங்களது காரில் சென்னையிலிருந்து  இரவு புறப்பட்டு வந்துள்ளனர்.

  இந்நிலையில், கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை மணவாசி டோல்பிளாசா அருகே  வந்தபோது. அப்பகுதியில் சாலை மேடு பள்ளமாக பழுதடைந்திருந்ததால்,  திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து 15 அடி பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்துள்ளது.

  இதையும் படிங்க : மீன் வலையில் சிக்கிய கோதுமை நாகம்... படமெடுத்து ஆடியதால் அதிர்ந்த மீனவர்கள்

  இதில் 2 வயது குழந்தை சுஷ்மிதா தூக்கி எறியப்பட்ட நிலையில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. மனைவி படுகாயம் அடைந்த நிலையில் காரில் இருந்து மீட்டு வெளியே கொண்டு வந்த கணவர் தூக்கி எறியப்பட்டு தூரத்தில் இறந்து கிடந்த குழந்தையை தூக்கி மடியில் போட்டு அடித்துக்கொண்டு அழுத காட்சி அவ்வழியாகச் சென்றவர்களை வேதனையடைய செய்தது.

  இதனைத்தொடர்ந்து அவ்வழியாக வந்த பொதுமக்கள், டோல்பிளாசா  ரோந்து வாகன ஊழியர்கள், படுகாயம் அடைந்த கணவன், மனைவியை மீட்டு தேசிய நெடுஞ்சாலை ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் விபத்து குறித்து மாயனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  செய்தியாளர் : கார்த்திகேயன் - கரூர்

  Published by:Karthi K
  First published:

  Tags: Accident, Karur