ஹோம் /நியூஸ் /கரூர் /

கரூரில் தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி படித்த மாணவன் உயிரிழப்பு

கரூரில் தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி படித்த மாணவன் உயிரிழப்பு

மாதிரி படம்

மாதிரி படம்

school student death | கரூரில் தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 1 பயின்ற மாணவர் சந்தோஷ் குமார், வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Karur, India

  கரூரில் தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ் 1 படிக்கும்  மாணவன் திடீரென உயிரிழந்தார். வலிப்பு வந்து மயங்கி விழுந்ததாக பள்ளி நிர்வாகம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது ஏற்கனவே மாணவர் இறந்து விட்டதாக  மருத்துவர்கள்  தெரிவித்துள்ளனர்.

  கரூர் மாவட்டம், காக்காவாடி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் திண்டுக்கல் மாவட்டம், ஆத்துமேடு கொங்கு நகரைச் சேர்ந்த சரவணன் மகன் சந்தோஷ் குமார் ( 15) என்பவர் விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு பள்ளியின் விடுதியில் உணவு அருந்தி சென்ற போது மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

  பள்ளி நிர்வாகத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

  அந்த மாணவனை பரிசோதித்த மருத்துவர் சந்தோஷ் குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து  சந்தோஷ் குமாரின்  உடல்  கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.இது குறித்து அரவக்குறிச்சி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  செய்தியாளர்: தி.கார்த்திகேயன்,கரூர்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Death, Karur, School student