ஹோம் /நியூஸ் /கரூர் /

மீன் வலையில் சிக்கிய கோதுமை நாகம்... படமெடுத்து ஆடியதால் அதிர்ந்த மீனவர்கள்

மீன் வலையில் சிக்கிய கோதுமை நாகம்... படமெடுத்து ஆடியதால் அதிர்ந்த மீனவர்கள்

கோதுமை நாகம்

கோதுமை நாகம்

நீரில் அடித்து வரப்பட்டதாக கூறும் 10 அடி நீள அரிய வகை கோதுமை நாகம், மீன் வலையில் சிக்கியுள்ளது. 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Karur | Karur

  மாயனூர் காவிரி கதவணை அருகே மீன் வளையில் சிக்கிய 10 அடி நீளமுள்ள கோதுமை நாகத்தை தீயணைப்புத்துறையினர் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர்.

  கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி ஆற்றில் 2 ,3000 கன அடி நீர் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கதவனை அருகே ஆற்றின் கரையோரத்தில் உள்ள சுடுகாட்டு பகுதியில்  மீனவர்கள் பயன்படுத்திய வலைகள் கிடந்துள்ளது. நீரில் அடித்து வரப்பட்டதாக கூறும் 10 அடி நீள அரிய வகை கோதுமை நாகம், மீன் வலையில் சிக்கியுள்ளது.

  காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், இன்று காலை மீனவர்கள் மீன் வலைகள்,  படகுகளை ஆற்றிலிருந்து வெளியேற்றி பாதுகாப்பாக வைக்க செல்லும் போது மீன் வலையில் சிக்கியிருந்த பாம்பை கண்டு அச்சமடைந்துள்ளனர்.

  இதை அறிந்த அப்பகுதி மக்கள், மீனவர்கள் பாம்பை சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனர். இதனை கண்ட அந்த பாம்பு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் படமெடுத்த படி நின்று கொண்டிருந்தது. இதனை பார்த்து அச்சமடைந்த பொதுமக்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.ஒரு மணி நேரத்திற்கு பிறகு வந்த தீயணைப்புத்துறையினர், அரைமணி நேரமாக போராடி வலையில் சிக்கியிருந்த பாம்பை பத்திரமாக மீட்டனர்.

  செய்தியாளர்: தி.கார்த்திகேயன், கரூர்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Karur, Snake