முக அழகைப் பராமரிக்க கரீனா கபூர் சொல்லும் வீட்டுக்குறிப்புகள்

கரீனா கபூரின் ஸ்டைல் மற்றும் ஆளுமைத் திறன் மற்றவர்களை ஈர்க்கத் தவறியதில்லை

முக அழகைப் பராமரிக்க கரீனா கபூர் சொல்லும் வீட்டுக்குறிப்புகள்
கரீனா கபூரின் ஸ்டைல் மற்றும் ஆளுமைத் திறன் மற்றவர்களை ஈர்க்கத் தவறியதில்லை
  • Share this:
35 வயதை அடைந்தாலும் இளமையாகத் தோற்றமளிக்கும் கரீனா கபூர், உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவதே முக்கிய காரணம். இதை அவரே பல நேர்காணல்களில் குறிப்பிட்டுள்ளார். ஒரு குழந்தைக்கு தாயாக இருந்தாலும் அவரின் ஸ்டைல் மற்றும் ஆளுமைத் திறன் மற்றவர்களை ஈர்க்கத் தவறியதில்லை.

சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ஊரடங்கு நாட்களில் தன்னுடைய சரும அழகை பராமரிக்க வீட்டுக் குறிப்புகளைதான் செய்து வருவதாகக் கூறியுள்ளார். அதில் ஒரு குறிப்பை ரசிகர்களுக்காகவும் பகிர்ந்துகொண்டார் அது உங்களுக்காக இதோ...

தேவையான பொருட்கள்


சந்தனம் - 2 tsp
வைட்டமின் ஈ எண்ணெய் - 2 சொட்டு
மஞ்சள் - ஒரு சிட்டிகைபால் - 1 ஸ்பூன்
செய்முறை :

மேலே குறிப்பிட்ட அனைத்தையும் ஒரு கிண்ணத்தில் கொட்டி நன்குக் கலக்குங்கள். அது பேஸ்ட் பதத்தில் இருக்க வேண்டும்.

முகம் முழுவதும் சீராக மாஸ்க் போல் அப்ளை செய்து 20 நிமிடங்களுக்கு அப்படியே காயவிடுங்கள்.

சமந்தா எப்படி இவ்வளவு அழகா இருக்காங்க..? ரகசியத்தைத் தெரிந்துகொள்ள கிளிக் பண்ணுங்க..!

காய்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவிவிடுங்கள். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்து வர மென்மையாக, பருக்கள் இல்லாத சரும அழகைப் பெறலாம். அதோடு எண்ணெய் வடிவதும் இருக்காது.

 Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, http://tamilcms.news18.com/wp-admin/post.php?post=242571&action=edit
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

பார்க்க :

 

 
First published: May 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading