ஹோம் /நியூஸ் /Kanniyakumari /

விசாரணையின் போது எஸ்.ஐ. உதட்டில் குத்திய வாலிபர் கைது

விசாரணையின் போது எஸ்.ஐ. உதட்டில் குத்திய வாலிபர் கைது

ரீகன்

ரீகன்

Kanyakumari : கன்னியாகுமரியில் போலீஸ் விசாரணையின் போது எஸ்.ஐ. உதட்டில் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு காவல் நிலையத்தில் விசாரணையின் போது எஸ்.ஐ-ன் உதட்டில் குத்திய வாலிபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமரி மாவட்டம் மண்டைக்காடு புதூர் சி.ஆர்.எஸ். நகரை சார்ந்தவர் ஜாண்நாயகம். அவரின் மகள் மேரி டார்வின் மெல்பா. அவர் அதே ஊரை சார்ந்த ரீகன் என்பவரை கடந்த 2015ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணமான சில நாட்களிலேயே ரீகன் மது அருந்தி விட்டு வீட்டில் பிரச்னை செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. தற்போது அவர்களுக்கு 7 மற்றும் 5 வயதுகளில் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். மனைவி, பிள்ளைகளையும் ரீகன் அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதனால் மேரி டார்வின் மெல்பா கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பு தனது பிள்ளைகளை அழைத்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

ரீகன் அங்கேயும் அடிக்கடி சென்று மனைவி மற்றும் மனைவி குடும்பத்தாரிடம் தகராறு செய்து வந்துள்ளார். அதேபோல் நேற்று முன் தினம் காலையில் ரீகன் ஜாண்நாயகம் வீட்டிற்கு சென்று மனைவி மற்றும் அவருடைய குடும்பத்தாரிடம்  தகராறில் ஈடுப்பட்டார். இதனால் ஜாண்நாயகம் மண்டைக்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த புகாரின் பேரில் சப் -இன்ஸ்பெக்டர் முரளீதரன் விசாரணைக்காக ரீகனை காவல் நிலையத்திற்கு அழைத்துள்ளார்.

விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் போதே ஆத்திரமடைந்த ரீகன், சப்-இன்ஸ்பெக்டரிடன் உதட்டில் கையால் குத்தி தாக்கியுள்ளார். இதனால் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Must Read : ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கை 9-ஆக குறைவு

இந்த தாக்குதலில் காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். காவல் நிலையத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து அவர் அதே காவல் நிலையத்தில் புகார் செய்த நிலையில், போலீசார் ரீகன் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

First published:

Tags: Arrested, Kanyakumari