ஹோம் /நியூஸ் /கன்னியாகுமரி /

கன்னியாகுமரியில் பிரபல ஸ்வீட் கடையில் இனிப்புகளில் புழு... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி...

கன்னியாகுமரியில் பிரபல ஸ்வீட் கடையில் இனிப்புகளில் புழு... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி...

ஸ்வீட் பாக்ஸில் இருந்த புழுக்கள்

ஸ்வீட் பாக்ஸில் இருந்த புழுக்கள்

Bakery Issue | இந்த கடையில் இருந்து வாங்கி சென்ற தின்பண்டங்களில் புழுக்கள் இருந்துள்ளது. இது சம்பந்தமாக வாடிக்கையாளர் ஒருவர் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Kanniyakumari, India

  கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பகுதியில் செயல்பட்டு வரும் சென்னை ஸ்வீட்ஸ் பேக்கரியில் தீபாவளிக்கு விற்கப்பட்ட தின்பண்டங்களில் புழுக்கள் இருந்ததால் வாடிக்கையாளர்கள் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஆயத்தமாகி வரும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் தீபாவளி பண்டிகைக்காக புதிய ரக இனிப்புகள் மற்றும் பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன. இவற்றை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

  கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பகுதியில் செயல்பட்டு வரும் சென்னை ஸ்வீட்ஸ் பேக்கரி கடையில் தீபாவளி பண்டிகைக்காக தயாரிக்கப்பட்ட தின்பண்டங்கள் குறித்த விளம்பரங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில் விளம்பரங்களை நம்பி ஏராளமான பொதுமக்கள் விரும்பி வந்து தின்பண்டங்களை வாங்கி செல்கின்றனர்.

  இதையும் படிங்க : கள்ளக்காதலி கொடுத்த டார்கெட்... வாரத்திற்கு ஒரு வீட்டில் கொள்ளை.. மாதம் ஒரு இன்ப சுற்றுலா... கன்னியாகுமரியில் சிக்கிய பலே திருடன்

  இந்நிலையில், இந்த கடையில் இருந்து வாங்கி சென்ற தின்பண்டங்களில் புழுக்கள் இருந்துள்ளது. இது சம்பந்தமாக வாடிக்கையாளர் ஒருவர் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  இது சம்மந்தமாக உணவு பாதுகாப்பு துறையினர் இந்த பேக்கரியை ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்களுக்கு தரமற்ற இதுபோன்ற உணவு பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் கடைகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.

  செய்தியாளர் : சஜயகுமார் - கன்னியாகுமரி

  Published by:Karthi K
  First published:

  Tags: Deepavali, Kanniyakumari, Sweets