ஹோம் /நியூஸ் /கன்னியாகுமரி /

பேருந்து சக்கரத்தில் சிக்கி இளம்பெண் உடல் நசுங்கி பலி - தந்தை கண் முன்னே நடந்த கோர விபத்து!

பேருந்து சக்கரத்தில் சிக்கி இளம்பெண் உடல் நசுங்கி பலி - தந்தை கண் முன்னே நடந்த கோர விபத்து!

பலியான பெண்

பலியான பெண்

Kanniyakumari News : கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் தங்கையை பார்க்க தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் வந்த இளம்பெண் பரிதாபமாக உடல்நசுங்கி உயிரிழப்பு. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanniyakumari, India

திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மகராசி(22). இவர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் தனது தங்கையை பார்க்க தனது தந்தை ஜெயபாலுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். ஆரல்வாய்மொழி பகுதியில் வந்தபோது, அப்பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் சாலையோரமாக இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு இருவரும் டீ குடித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், எதிரே நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்லும் அரசு பேருந்து வேகமாக டிரைவரின் கட்டைப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த மகராசி, ஜெயபால் மற்றும் இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இதில் இருசக்கர வாகனம் பல அடி தூரம் இழுத்து செல்லப்பட்ட நிலையில், பேருந்து சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்தில் மகராசி உயிரிழந்தார்.

மேலும் ஜெயபால் லேசான காயங்களுடன்  உயிர்தப்பினார். இந்த விபத்து நடந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் இச்சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் உயிரிழந்த மகராசியின்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கன்னியாகுமரி மாவட்ட அரசு  மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தங்கையை  பார்க்க வந்த இடத்தில் தந்தையின் கண்முன்னே  உடல் நசுங்கி மகள் உயிரிழந்த  சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் : சரவணன் - நாகர்கோவில்

First published:

Tags: Crime News, Kanniyakumari, Local News