ஹோம் /நியூஸ் /கன்னியாகுமரி /

ஜோதிடத்தை நம்பி காதலனுக்கு ’ஆசிட் ஜூஸ்’ கொடுத்து கொன்ற விவகாரம் : கொலை செய்த இளம்பெண் தற்கொலை முயற்சி!

ஜோதிடத்தை நம்பி காதலனுக்கு ’ஆசிட் ஜூஸ்’ கொடுத்து கொன்ற விவகாரம் : கொலை செய்த இளம்பெண் தற்கொலை முயற்சி!

காதலனை கொன்ற பெண் தற்கொலை முயற்சி

காதலனை கொன்ற பெண் தற்கொலை முயற்சி

ஜோதிடத்தை நம்பி 2-வது கணவருடன் வாழ ஆசைப்பட்டு ஷாரோன் ராஜுக்கு விஷம் கொடுத்ததாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanniyakumari, India

கன்னியாகுமரி அருகே ஜோதிடத்தை நம்பி காதலனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த இளம் பெண், காவல் நிலையத்தில் இருந்த கிருமிநாசினி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

கேரளா மாநிலம் பாறசாலையைச் சேர்ந்த ஷாரோன் ராஜ் என்பவரும் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் வசிக்கும் கிரீஷ்மா என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை கொண்ட கிரீஷ்மா குடும்பத்தினர், அவரது ஜாதகத்தின்படி முதல் கணவர் உயிரிழந்துவிடுவார் என்றும் 2-வது கணவருடன்தான் அவர் வாழமுடியும் எனவும் நம்பியுள்ளனர்.

இதனையடுத்து குடும்பத்தினரின் உதவியுடன் ஷாரோன் ராஜை வரவழைத்த கிரீஷ்மா கோயிலில் திருமணம் செய்துள்ளார்.

தொடர்ந்து, விஷம் கலந்த கசாயத்தையும் குளிர்பானத்தையும் ஷாரோன் ராஜுக்கு கொடுத்துள்ளார்.

அதனை குடித்தவுடனேயே ஷாரோன் ராஜுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வீட்டிற்கு சென்ற ஷாரோன் ராஜ் சில நாட்களில் உயிரிழந்தார்.

இதையும் படிங்க : முதல் கல்யாணம் நிலைக்காது.. ஆசை காதலனுக்கு ஆசிட் கலந்த ஜூஸ் கொடுத்த காதலி - இளைஞர் கொலையில் திடுக்கிடும் தகவல்

இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ஷாரோன் ராஜுக்கு விஷம் கொடுத்ததை கிரீஷ்மா ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும், ஜோதிடத்தை நம்பி 2-வது கணவருடன் வாழ ஆசைப்பட்டு ஷாரோன் ராஜுக்கு விஷம் கொடுத்ததாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து நெடுமங்காடு காவல் நிலையத்திற்கு கிரீஷ்மா அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது, கழிவறையில் இருந்த கிருமிநாசினி மருந்தை குடித்து அவர் தற்கொலைக்கு முயன்றார்.

உடனடியாக அவரை மீட்ட போலீசார், திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர்.

Published by:Lakshmanan G
First published:

Tags: Murder case, Sucide