ஹோம் /நியூஸ் /கன்னியாகுமரி /

நின்று நிதானமாக பைக்கை திருடி சென்ற திருடன்...

நின்று நிதானமாக பைக்கை திருடி சென்ற திருடன்...

சிசிடிசி - பைக்கை திருடும் திருடன் வீடியோ

சிசிடிசி - பைக்கை திருடும் திருடன் வீடியோ

Kanniyakumari | கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்ட பைக் திருட்டு.  திருடிய பைக்கை தெருவில் நிறுத்தி நிதானமாக அமர்ந்து சீப்பால்  சிகையலங்காரம் செய்த பைக் திருடனின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Kanniyakumari, India

  கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் அதே பகுதியில் பைக் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். கடந்த 1 ம் தேதி அன்று இரவு ராஜேஷ் தனது வீட்டின் முன்பாக அவரது பைக்கினை நிறுத்தி உள்ளார்.  மறுநாள் காலையில் பார்க்கும் போது பைக் மாயமாகியிருந்தது.  இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேஷ் தெருவிலுள்ள சிசிடிவி  காட்சிகளை பார்த்துள்ளார்.

  அதில் அதிகாலை 2 மணியளவில் பைக்கினை ஒருவர் திருடி செல்வது தெரியவந்தது. மேலும் பைக்கினை திருடிய மர்ம நபர் பைக்கினை ஸ்டார்ட்  செய்த நிலையில் அதே இடத்தில் நின்று சீப்பு கொண்டு சிகையலங்காரம் செய்த காட்சிகளும் பின்னர் நிதானமாக பைக் ஓட்டி செல்வதும் பதிவாகியுள்ளது.

  Also see... 11 வயது சிறுவன் கடத்தல்.. 24 மணிநேரத்தில் மீட்டு அசத்திய காவல்துறை

  அது குறித்து கோட்டார் காவல் நிலையத்தில் ராஜேஷ் புகார் அளித்துள்ளார். சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருடிய பைக்கில்  நிதானமாக அமர்ந்து சீப்பால்  சிகையலங்காரம் செய்த பைக் திருடனின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  செய்தியாளர்: ஐ.சரவணன், நாகர்கோவில்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Bike, Kanniyakumari, Thief, Video gets viral