முகப்பு /செய்தி /கன்னியாகுமரி / ரூ.600.. காதலர் தினத்தை முன்னிட்டு அதிரடியாக உயர்ந்த ரோஜா பூக்களின் விலை..!

ரூ.600.. காதலர் தினத்தை முன்னிட்டு அதிரடியாக உயர்ந்த ரோஜா பூக்களின் விலை..!

ரோஜா

ரோஜா

காதலர் தினத்தை முன்னிட்டு தோவாளை மலர்ச் சந்தையில் ஒரு கட்டு ரோஜா பூ விலை மூன்று மடங்கு உயர்ந்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanniyakumari, India

உலகம் முழுவதும் காதலர் தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. காதலர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்த பெரும்பாலும் பரிசுப் பொருட்களை அளிப்பதுடன், ரோஜா பூ கொடுத்து அன்பை பரிமாறிக் கொள்வது வழக்கம். இதை கருத்தில் கொண்டு கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் மொத்தமாகவும், சில்லறையாகவும் ஏராளமான ரோஜா பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

குறிப்பாக, ஓசூர், பெங்களூரு போன்ற பகுதிகளில் இருந்து தாஜ்மஹால் ரோஜா, பட்டர் ரோஜா, சிவப்பு, மஞ்சள், வெள்ளை என பல வண்ணங்கள் ரோஜாப்பூக்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

தேவை அதிகரித்த போதும் பனிப்பொழிவு காரணமாக ரோஜாப்பூ வரத்து குறைந்துள்ளது. தோவாளை சந்தைக்கு நாள் ஒன்றுக்கு 500 கட்டு ரோஜாப்பூ வந்த நிலையில் இன்று 200 கட்டுகள் மட்டுமே வந்ததாக வியாபாரிகள் கூறுகின்றனர். இதன் காரணமாக ரோஜா பூக்களின் விலை மூன்று மடங்கு உயர்ந்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

First published:

Tags: Lovers day, Rose, Valentine's day