ஹோம் /நியூஸ் /கன்னியாகுமரி /

குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு : மீன்பிடிக்க சென்றபோது நேர்ந்த சோகம்..!

குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு : மீன்பிடிக்க சென்றபோது நேர்ந்த சோகம்..!

குளத்தில் மீன்பிடிக்க சென்ற சிறுவர்களுக்கு நிகழ்ந்த சோகம்

குளத்தில் மீன்பிடிக்க சென்ற சிறுவர்களுக்கு நிகழ்ந்த சோகம்

Kanniyakumari News : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கீழ ஆசாரிப்பள்ளம் பகுதியில் குளத்தில் மீன்பிடிக்க சென்ற சிறுவர்கள் 2 பேர்  நீரில் மூழ்கி பலி.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Kanniyakumari, India

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கீழாசாரிப்பள்ளம் பகுதியில் தாமரை குளம் உள்ளது. இக்குளத்தில் தூர்வாரப்படாமல்  சேறும்  சகதியுமாக காணப்படுகிறது.

இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த ஆல்பன் ராய் (10), சாம் கேர்சன்(9) மற்றும் இம்மானுவேல் ஆகிய 3 சிறுவர்கள் பள்ளி விடுமுறை என்பதால் அக்குளத்தில் சிறிய வலையுடன்  விளையாட்டிற்காக மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

இதில் திடீரென குளத்தில் குதித்தபோது சகதியில்  சிக்கியுள்ளனர். அப்போது, இம்மானுவேல் மட்டும் தப்பித்து கரையில் வந்த நிலையில் ஆல்பம் ராய் மற்றும் சாம் கேர்சன் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க : 2வது மனைவியை 18 துண்டுகளாக வெட்டி நாய்களுக்கு உணவாக்கிய கொடூர கணவன் : அடுத்த பகீர்!

இதுகுறித்து இம்மானுவேல் அளித்த தகவலின்பேரில்  ஆசாரிப்பள்ளம் போலீசார், தீயணைப்பு துறையினரின் உதவியுடன் சிறுவர்களின் உடல்களை மீட்டு ஆசாரிப்பள்ளம் பகுதியில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஒரே பகுதியை சேர்ந்த இரு சிறுவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் : சரவணன் - நாகர்கோவில் 

First published:

Tags: Kanniyakumari, Local News