ஹோம் /நியூஸ் /கன்னியாகுமரி /

சேதமடைந்த சாலை : நள்ளிரவில் அடர்ந்த வனப்பகுதியில் ஆம்புன்ஸில் நடந்த பிரசவம்!

சேதமடைந்த சாலை : நள்ளிரவில் அடர்ந்த வனப்பகுதியில் ஆம்புன்ஸில் நடந்த பிரசவம்!

அடர்ந்த காட்டில் நடந்த பிரசவம்

அடர்ந்த காட்டில் நடந்த பிரசவம்

Kanniyakumari | கன்னியாகுமரி மாவட்டத்தில் யானைகள் நடமாட்டம் மிகுந்த அடர்ந்த வனப்பகுதியில் நள்ளிரவில் 108 ஆம்புலன்ஸில் இளம் பெண்ணுக்கு தலை பிரசவம் நடந்தது. இதனால் மிகுந்த அச்சம் அடைந்த மக்கள் மலைக் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanniyakumari, India

கன்னியாகுமரி மாவட்டம்  மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியான கோதையார் வனப்பகுதி அருகே கோலஞ்சிமடம் பகுதியியை சேர்ந்தவர் அபிஷா (19 ). இவர் கர்ப்பமாகி முதல் பிரசவத்திற்காக காத்திருந்தார். நேற்று நாள் இரவு அவருக்கு பிரசவ வலி ஏற்படவே பேச்சிப்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இரவு தகவல் கொடுக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் விரைந்து வந்து அந்த  பெண்ணை அழைத்து சென்றது.

அப்போது வரும் வழியில் அந்தப் பெண்ணுக்கு யானைகள் நடமாடும் அடர்ந்த காட்டுப்பகுதியில் வைத்து பிரசவ வலி அதிகமானது. இதனால் ஓட்டுநர் ஆம்புலன்சை சாலை ஓரமாக நிறுத்தினார். உடனே அவசரகால மருத்துவர் சுஜின் ராஜ் அந்தப் பெண்ணுக்கு ஆம்புலன்ஸிலேயே பிரசவம் பார்த்து மருத்துவ சிகிச்சை அளித்தார்.

அந்தப் பெண்மணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. மருத்துவ சிகிச்சை அளித்து தாயும், சேயும் தற்போது பாதுகாப்பாக பேச்சிப்பாறை  அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து இந்த வனப்பகுதியில் சாலைகள் பல வருடங்களாக செப்பனிடாமால் இருப்பதுடன் இந்த மலைவாழ் கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையமும் இல்லை.

இதனால் பல பிரசவங்கள் மிகுந்த சிரமப்பட்டு நடைபெறுவதாகவும் இதுபோன்று ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்த நிகழ்வு இது இரண்டாவது முறை எனவும் இதனால் மிகுந்த அச்சம் அடைந்துள்ளதாகவும் மலை கிராம மக்கள் கூறுகின்றனர்.

Also see... குற்றங்களை தடுக்க நடவடிக்கையை வேகப்படுத்துங்கள் : தமிழக காவல்துறைக்கு அண்ணாமலை சொன்ன அட்வைஸ்!

மேலும் இந்தப் பகுதியில் ஓர் ஆரம்ப சுகாதார நிலைய அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Baby, Kanniyakumari, Pregnancy