கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் அருகே தனியார் மருத்துவமனையில் இறந்து பிறந்த குழந்தையை உறவினர்களுக்கு தெரிவிக்காமல் கழிப்பறையில் மறைத்து வைத்திருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் கழிப்பறையில் குழந்தையின் சடலம் இருக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பி.எஸ் புரம் பகுதியை சேர்ந்தவர் பீர். இவரது மனைவி ஷிபானா இவரை நேற்று பிரசவத்திற்காக உறவினர்கள் நெய்யூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்நிலையில் ஷிபானாவுக்கு நேற்றிரவு பிரசவம் நடந்துள்ளது.
ஆனால் செவிலியர்கள் பிறந்த குழந்தையை எடுத்து சென்றதோடு குழந்தை குறித்து எந்த தகவலும் உறவினர்களிடம் சொல்லாமல் அங்கிருந்து சென்றதாக தெரிகிறது.
இதனையடுத்து உறவினர்கள் குழந்தையை தேடிய நிலையில் குழந்தை இறந்த நிலையில் துணிகளால் சுற்றப்பட்டு மருத்துவமனை கழிப்பறையில் வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து உறவினர்கள் தவறான சிகிச்சையால் குழந்தை இறந்து பிறந்ததை மறைக்கவே செவிலியர்கள் குழந்தையின் சடலத்தை கழிப்பறையில் மறைத்து வைத்துள்ளதாக குற்றம்சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Also see... திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.. தரிசனத்துக்காக 35 மணி பக்தர்கள் காத்திருப்பு
இந்த நிலையில் இறந்து பிறந்த குழந்தை மருத்துவமனை கழிப்பறையில் துணிகளால் சுற்றி வைக்கப்பட்டிருக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த இரணியல் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CCTV, Crime News, Kanniyakumari, Newborn baby, Video