Home /News /kanniyakumari /

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்.. கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்.. கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..

கன்னியாகுமரி

கன்னியாகுமரி

418 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோவில் மாஹா கும்பாபிசேகத்தை முன்னிட்டு நாளை ஜுலை 6ஆம் தேதி குமரி மாவட்டத்தில் உள்ளுர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறித்துள்ளார்.

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் நாளை (06.07.2022) 418- ஆண்டுகளுக்கு பிறகு மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர்.  

இந்நிலையில் குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில் தமிழக அரசின் உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் நாளை 6. 07.2022 அன்று மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் உள்ளூர் விடுமுறை என  அறிவித்துள்ளார். அரசின் இந்த அறிவிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Also see... திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்...

மேலும் கும்பாபிஷேகத்திற்கான பணிகளை அறநிலைத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். இந்த விழாவில்  சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என்ரு எதிர்பார்க்கப்படுகிறது. அதனால்  காவல்துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு பகுதிகளில் வாகனம் நிறுத்தம், கழிவறை, குடிநீர் உட்பட அடிப்படை வசதிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Hindu Temple, Holiday

அடுத்த செய்தி