Home /News /kanniyakumari /

418 ஆண்டுகளுக்கு பிறகு திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

418 ஆண்டுகளுக்கு பிறகு திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவில்

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவில்

kanniyakumari : திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் மஹா கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமிதரிசனம் செய்தனர்.

  • News18
  • Last Updated :
    கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் மஹா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மிகுந்த பக்தியுடன் பங்கேற்றனர்.

    108 வைணவத்திருப்பதிகளில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 418 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கடந்த 29 ஆம் தேதியே கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கி நடைபெற்றன.

    நேற்று காலை கணபதி ஹோமம், அபிஷேகம், ஸ்ரீமத் பாகவத பாராயணம் அதைத்தொடர்ந்து அன்னதானம் நடந்தது. மாலையில் அத்தாழ பூஜை, தீபாராதனையும் கும்ப கலசத்தில் வராகு தானியங்கள் நிறைக்கும் பணியும் நடந்தது.

    இந்நிலையில் குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில் தமிழக அரசின் உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த், மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் உள்ளூர் விடுமுறை என அறிவித்துள்ளார். அரசின் இந்த அறிவிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கும்பாபிஷேகத்தை ஒட்டி, காவல்துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு பகுதிகளில் வாகனம் நிறுத்தம், கழிவறை, குடிநீர் உட்பட அடிப்படை வசதிகளை மேற்கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தினர். திரளான பக்தர்கள் மிகுந்த பக்தியோடு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Must Read : சமயபுரம் மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்... விழாக்கோலம் பூண்ட திருச்சி

    இன்று அதிகாலை 3.30 மணிக்கு கணபதி ஹோமமும், 5.10 மணிக்கு ஜீவ கலச அபிஷேகம் நடைபெற்றது. காலை 6 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, கலை 11 மணிக்கு சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு பகவதி சேவை, அத்தாழ பூஜையும், 6 மணிக்கு லட்சதீபம், 6.30 மணிக்கு விளக்கனி மாடத்தில் விளக்கேற்றும் தீபாராதனை ஆகியவை நடைபெறுகிறது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Kanyakumari, Temple

    அடுத்த செய்தி