ஹோம் /நியூஸ் /கன்னியாகுமரி /

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவில் ஐப்பசி மாத ஆறாட்டு வைபம்... உற்சாக வரவேற்பு அளித்த பக்தர்கள்...

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவில் ஐப்பசி மாத ஆறாட்டு வைபம்... உற்சாக வரவேற்பு அளித்த பக்தர்கள்...

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில்

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில்

Kanniyakumari | குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் ஐப்பசி மாத ஆறாட்டு வைபம் நடைபெற்றது. ஆறாட்டு முடிந்து ஆலயத்திற்கு திரும்பிய சாமி சிலைகளுக்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanniyakumari, India

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களுள் ஒன்றானது திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவில். இத்திருக்கோவிலில் ஆண்டுக்கு இரண்டு முறை பங்குனி, ஐப்பசி மாதங்களில் பத்து நாட்கள் திருவிழா கொண்டாடபட்டு வருகிறது.

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் 400ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜூலை 6ஆம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைதொடர்ந்து தங்ககவசம் பதிக்கபட்ட  புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யபட்டு 10நாட்கள் திருவிழா நடைபெற்றது. அதை தொடர்ந்து ஐப்பசி திருவிழா கடந்த 23 கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதைதொடர்ந்து திருவிழாவின் முக்கிய  நிகழ்வான ஐப்பசி ஆறாட்டு வைபவம் நடைபெற்றது. முன்னதாக மேற்கு வாசல் வழியாக மன்னரின் உடைவாள் முன்னிலையில் பல்லக்கில்  வெளியேறிய  சாமி சிலைகளுக்கு காவல்துறைசார்பில் மரியாதை செலுத்தபட்டது.

Also see... திருப்பதியில் பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன் விநியோகம் மீண்டும் துவங்கியது

தொடர்ந்து நள்ளிரவில் தளியல் பகுதியில் பரளியாற்றில் ஆதிகேசவ பெருமாள் மற்றும் ஸ்ரீகிருஷ்ணர் சாமி உற்சவமூர்த்திகளுக்கு ஆறாட்டு வைபவம் நடைபெற்றது. அதைதொடர்த்து பல்லக்கு வாகனத்தில் அலங்கரிக்கபட்டு ஆலயத்திற்கு திரும்பிய சாமி சிலைகளுக்கு வழியெங்கும் பக்தர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பளித்தனர்.

' isDesktop="true" id="829133" youtubeid="cgMb2fY6-So" category="kanniyakumari">

திருவட்டார் ஆதிகேசவ பெருமாளின் தம்பியாக கருதப்படும் திருவனந்தபுரம் பத்பநாபசாமிக்கும் ஒரேநாளில் ஆறாட்டு வைபவம் நடைபெற்றது குறிப்பிடதக்கது.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Hindu Temple, Kanniyakumari