ஹோம் /நியூஸ் /கன்னியாகுமரி /

கேரளாவில் திருடனின் பலிக்காத பிரார்த்தனை.... காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்...

கேரளாவில் திருடனின் பலிக்காத பிரார்த்தனை.... காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்...

சிசிடிவி காட்சி

சிசிடிவி காட்சி

Devoti Thief Arrest | ராஜேஷ் என்ற திருடன் இந்த கோயிலுக்குள் திருட நுழைந்தான். அப்போது அவன் பய பக்தியுடன் கடவுளை கும்பிட்டு பிரார்த்தனை செய்தான்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kerala, India

கோயிலில் கடவுளை கும்பிட்டு  பய பக்தியுடன் தங்க நகைகள், திருவாபரணம் உள்ளிட்ட பொருட்கள் திருடி சென்ற திருடன் சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசாரிடம் சிக்கிக்கொண்ட சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது.

கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள அரூர் புத்தன் அங்காடி ஸ்ரீகுமார விலாசம் கோயில் உள்ளது. இந்நிலையில், ராஜேஷ் என்ற திருடன் இந்த கோயிலுக்குள் திருட நுழைந்தான். அப்போது அவன் பய பக்தியுடன் கடவுளை கும்பிட்டு பிரார்த்தனை செய்தான்.

இதனைத்தொடர்ந்து, கோயில் கருவறைக்குள் வைத்திருந்த தங்க நகைகள், திருவாபரணம், தங்க கிரீடம் தங்கக்கூடு உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை திருடி சென்றுள்ளான்.

இதையும் படிங்க : குரூப் 2 ரிசல்ட் தாமதம் ஏன்? - டி.என்.பி.எஸ்.சி விளக்கம்

இந்நிலையில், நேற்று அரங்கேறிய இந்த கோயில் கொள்ளை சம்பவம் குறித்து புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதன்படி சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் திருட்டில் ஈடுபட்ட ராஜேஷ் என்ற கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவனிடம் இருந்து தங்க நகை உட்பட பொருட்களை மீட்டனர். கொள்ளை அரங்கேறி சில மணி நேரத்தில் கொள்ளையன் போலீசாரிடம் சிக்கி கொண்டதோடு கொள்ளையனின் பிரார்த்தனையும் வீணானது குறிப்பிடத்தக்கது.

Published by:Karthi K
First published:

Tags: Crime News, Kanniyakumari, Kerala