முகப்பு /செய்தி /கன்னியாகுமரி / திருடிய சைக்கிளை பழைய இரும்பு கடையில் போட சென்ற போது சிக்கிய போதை ஆசாமி!

திருடிய சைக்கிளை பழைய இரும்பு கடையில் போட சென்ற போது சிக்கிய போதை ஆசாமி!

போதை ஆசாமி

போதை ஆசாமி

தான் திருடிய சைக்கிளை பழைய இரும்பு கடையில் போட சென்ற போது பொதுமக்கள் உதவியுடன் பிடித்த சைக்கிள் உரிமையாளர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanniyakumari (Kanyakumari), India

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே தோட்டத்தில் நிறுத்தி வைத்திருந்த சைக்கிளை திருடி எடுத்து சென்று பழைய இரும்பு கடையில் விற்பனை செய்ய முயன்ற போதை ஆசாமியை பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்ததால் பரபரப்பு.

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே சரல்முக்கு பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தனது சைக்கிளில் குளவரம்பு பகுதியில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்றுள்ளார். அவரது சைக்கிளை தோட்டத்திற்கு வெளியே சாலை ஓரம் நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். மீண்டும் வெளியே வந்து பார்த்தபோது தனது சைக்கிள் காணாமல் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து பல  இடங்களில் தேடி பார்த்துள்ளார்.

அப்போது அவரது சைக்கிளுடன் ஒருவன் சென்றதை பார்த்த பொதுமக்கள் அவரிடம் கூறவே, அவர்கள் கூறிய வழியில் பழைய இரும்பு கடை வழியே சென்றுள்ளார். அங்கு அந்த சைக்கிளை பழைய இரும்பிற்கு போட போதையுடன் நின்றிருந்த திருடனை பொதுமக்கள் உதவியுடன் பிடித்து நித்திரவிளை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் திருட்டில் ஈடுபட்ட நபர் நித்திரவிளை அருகே கும்பனாளி பகுதியை சேர்ந்த ஜோடி என்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த போதை ஆசாமியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

First published:

Tags: Kanniyakumari, Theft