ஹோம் /நியூஸ் /கன்னியாகுமரி /

போதைப் பொருள் கடத்தலை தடுக்க கேரளா- தமிழ்நாடு போலீஸ் கூட்டு சோதனை

போதைப் பொருள் கடத்தலை தடுக்க கேரளா- தமிழ்நாடு போலீஸ் கூட்டு சோதனை

ஆய்வு ந்டத்திய இரு மாநில எஸ்.பி

ஆய்வு ந்டத்திய இரு மாநில எஸ்.பி

இருமாநில போலீசார் தமிழக கேரள எல்லை பகுதியில் உள்ள கூரியர் கடைகள் மற்றும் மருந்து கடைகளில் திடீரென சோதனையில் ஈடுபட்டு போதை பொருட்கள் மற்றும் குற்ற சம்பவங்கள் குறித்து தகவல் தெரிவிக்க செல்போன் எண்களையும் வெளியிட்டனர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanniyakumari, India

கஞ்சா, குட்கா உட்பட கடத்தலை தடுக்க தமிழக கேரள போலீசார் இணைந்து  குமரிமாவட்டம் எல்லை  களியக்காவிளை பகுதியில் கூரியர் கடைகளில் சோதனை ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் தகவல் கொடுக்க இருமாநில போலீசாரும் தனித்தனியாக செல் போன் எண்கள் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில்  இருந்து கேரளாவுக்குக்கும் , கேரளாவில் இருந்து தமிழகத்திற்கும்  குட்கா , கஞ்சா உட்பட போதை பொருட்கள் கடத்தல் மற்றும் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் முயற்சி எடுத்து வருகின்றனர்.

இந்த வகையில் கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி  ஹரிகிரன்பிரசாத் மற்றும் கேரள மாநிலம் திருவனந்தபுரம் எஸ்.பி ஷில்பா தியாவையா ஆகியோர் தலைமையில் இருமாநில போலீசார் தமிழக கேரள எல்லை பகுதியில் உள்ள கூரியர் கடைகள் மற்றும் மருந்து கடைகளில் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.

இதையும் படிக்க : ஹெச்.ராஜா மீது விலங்குகள் நல வாரியத்தில் புகார்... 7 நாட்களில் அறிக்கை சமர்க்க உத்தரவு

தொடர்ந்து எல்லைப்பகுதி ஆட்டோ , கார் உட்பட வாகன ஓட்டிகள் மற்றும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டதோடு கேரள போலீசார்  9995966666 என்ற எண்ணையும் தமிழக போலீசார் 7010363173 என்ற செல்போன் எண்ணையும் வெளியிட்டு போதை பொருட்கள் குற்ற சம்பவங்கள் குறித்து தகவல் தெரிவிக்க கேட்டு கொண்டனர்.

Published by:Raj Kumar
First published:

Tags: Kanniyakumari, Kerala, Police, Smuggling