கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் வட்டார இந்துசமுதாயம் மற்றும் ஆலய நிர்வாகங்கள் சார்பிலும் 19வது ஆண்டு பொங்கல் விழா நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறுகையில், "சட்டமன்றத்தில் காங்கிரஸ், தி.மு.க எம்எல்ஏக்கள் ராமாயணம் என்பது கற்பனை கதை எனவும் ராமர் கட்டுகதை எனவும் கூறி இந்துமக்கள் மனதை புண்படுத்தியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலிருத்து வெற்றிபெற்று சென்ற காங்கிரஸ் , திமுக எம்எல்ஏக்கள் இந்துமக்களிடம் பொதுமன்னிப்பு கேட்கும்வரை பிரச்சினையை விடபோவதில்லை.
தனக்கு வழங்கபட்ட இசட் பிரிவு பாதுகாப்பு தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தூண்ணறிவு காவல்துறையினரின் அறிக்கை அடிப்படையில் மத்திய அரசு வழங்கியுள்ளதாகவும் ஏன் எதற்காக வழங்கபட்டது என மத்திய அரசிடம் கேட்கபோவதில்லை. அதேவேளையில் கட்சியில் செய்ய வேண்டிய பணியில் பாதிப்புகள் ஏற்படகூடாது என நினைப்பதாகவும் கூறினார்.
தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட பிரதிநிதி ஒருவர் உயிரிழந்திருப்பது வருத்ததிற்குரியது. அதேவேளையில் அவரை இழந்து வாடும் குடும்பத்தினரிடையே துக்கம் மறைவதற்கு முன்பாக இடைத்தேர்தல் நடத்த திமுக அரசு அவசரப்படுகிறது. மனிதனை மனிதனாக மதிக்கும் பண்பு திமுகவிற்கு இல்லை.
தனியார் துறையில் ஆண்டிற்கு பத்துலட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கபடும் எனவும் அரசுதுறையில் 3.5லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கபடும் என திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்டனர். திமுக ஆட்சிக்கு வந்து 20மாதங்கள் ஆகியுள்ளது. மொத்த ஆட்சியில் 3ல்ஒரு பங்கு முடிந்துள்ள நிலையில் இதுவரையிலும் வேலைவாய்ப்புகளை வழங்கபடவில்லை என குற்றஞ்சாட்டினார்.
தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4தேர்வு நடைபெற்று ஆறு மாதங்களாகியும் அதன் முடிவுகளை வெளியிடாத அரசு எப்படி வேலை வாய்ப்புகளை வழங்கமுடியும். திமுகவுக்கு எப்போதும் எதிரி வேண்டும் திரைப்பட அரசியல் படி திரைபடத்தில் நடிகர்களுக்கு வில்லன்கள் இருப்பது போல் திமுக அரசு ஆளுநரை வில்லனாக சித்தரிக்கிறது. ஆளூநரை வைத்து அரசியல் செய்வதாகவும் ஒவ்வொரு மாதமும் ஆளுநரை பற்றி புதுபுது பிரச்சினையை கிளப்புவது தான் திமுகவின் வாடிக்கை திமுகவினர் ஆளுநரை சீண்டி வருகின்றனர்.
மேற்குவங்கம் கேரளாவை போல் ஆளுநர் செய்தியாளர்களை நேரடியாக சந்தித்தால் அரசின் மானம் நிலைகுலைந்துவிடும். தொடர்ந்து ஆளுநரை திமுக சீண்டிக்கொண்டிருந்தால் ஆளுநர் அமைதி காப்பாரா என்பதை கூற இயலாது. 2024 தேர்தலில் பாஜக கொள்கை சார்ந்த கூட்டணி அமைக்கும் திமுகவை போல் சந்தர்பவாத கூட்டணி அமைக்காது .பாஜகவிற்கும் அதிமுகவிற்கும் இடையே புதிய கல்வி கொள்கை, மும்மொழிகொள்கை ஆகியவைகளில் பிரச்சினை இருக்கதான் செய்கிறது எனினும் ஒரே கொள்கை அடிப்படையில் கூட்டணி அமைக்கப்படும் என தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Annamalai, BJP, Governor, Kanyakumari, Pongal, RN Ravi, Tamil News