Home /News /kanniyakumari /

திமுகவினர் நடத்தும் மருத்துவ கல்லூரிகளுக்காக நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது - அண்ணாமலை உறுதி

திமுகவினர் நடத்தும் மருத்துவ கல்லூரிகளுக்காக நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது - அண்ணாமலை உறுதி

 இந்திய அளவில் தமிழகத்தில் தான் குற்ற சம்பவங்கள் அதிகமாக நடப்பதாக தரவுகள் உள்ளது. முதல்வர் சட்ட ஒழுங்கு சரியாக உள்ளது என கூறுவதை ஏற்க முடியாது - அண்ணாமலை

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu | Kanniyakumari

திமுகவினர் நடத்தும் மருத்துவ கல்லூரிகளுக்காக நீட் தேர்வை ஒருபோதும் ரத்து செய்ய முடியாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
70 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் சீரழிந்த இந்தியா, எட்டு ஆண்டு கால மோடி ஆட்சியில்  எப்படி வளர்ச்சி பெற்றது? என்பதை  ராகுல் காந்தி தனது பாதயாத்திரையில் தெரிந்து கொள்வார். திமுகவினர் நடத்தும் மருத்துவ கல்லூரிகளுக்காக நீட் தேர்வை எந்த காலத்திலும், ஒருபோதும் ரத்து செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

 மத்திய அரசு கண்டிப்பாக கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கும்.
பல காலகட்டங்களில் அதிமுக பல்வேறு பிரிவுகளாக பிரிந்துள்ளது, தமிழகத்தில் அதிக முறை ஆட்சி செய்த கட்சி அதிமுக,  அதனை குறைத்து மதிப்பிட கூடாது எனவும் கூறியுள்ளார்.

மேலும், சமூக ஊடகங்களை கண்காணிக்க காவல்துறை சார்பில் சமூக ஊடக குழுக்கள் அமைக்கப்பட்டது வரவேற்கத்தக்கது ஆனால் அது நடுநிலையோடு நேர்மையாக செயல்பட வேண்டும். இந்திய அளவில் தமிழகத்தில் தான் குற்ற சம்பவங்கள் அதிகமாக நடப்பதாக தரவுகள் உள்ளது. முதல்வர் சட்ட ஒழுங்கு சரியாக உள்ளது என கூறுவதை ஏற்க முடியாது என பேசியுள்ளார்.

மேலும் கனிம வள கடத்தல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், கனிமவழக்கடலை தடுக்க முடியவில்லை என்றால் மத்திய அரசிடம் நிர்வாகத்தை எழுதி கொடுத்து விடுங்கள் நாங்கள் தடுத்து நிறுத்துகிறோம் என கூறியுள்ளார்.

செய்தியாளர்:  ஐ.சரவணன், நாகர்கோவில்
Published by:Anupriyam K
First published:

Tags: Annamalai, BJP, Kanniyakumari, Neet Exam

அடுத்த செய்தி