ஹோம் /நியூஸ் /கன்னியாகுமரி /

ஃபிரிட்ஜில் ரத்தக்கறை, குக்கரில் உடல் உறுப்புகள்... கேரள நரபலி வழக்கு விசாரணையில் அம்பலமாகும் அதிர்ச்சி தகவல்கள்

ஃபிரிட்ஜில் ரத்தக்கறை, குக்கரில் உடல் உறுப்புகள்... கேரள நரபலி வழக்கு விசாரணையில் அம்பலமாகும் அதிர்ச்சி தகவல்கள்

கேரளா நரபலி

கேரளா நரபலி

Kanniyakumari | இலந்தூரில் நரபலி கொடுத்த பெண்ணின் உடல் உறுப்புகள் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்தது. கொல்லப்பட்ட பெண்களில் ஒருவரான ரோஸ்லியின் உடலில் கல்லீரல் மற்றும்  சிறுநீரகம் காணவில்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Kanniyakumari, India

கேரளா மாநிலம்  பத்தனம்திட்டா, இலந்தூர் நரபலி வழக்கில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நரபலி மட்டுமல்ல, பலியானவர்களின் உடல் உறுப்புகளும் கடத்தப்பட்டதா என்ற சந்தேகம் வலுத்து வருகிறது. கொல்லப்பட்ட பெண்களில் ஒருவரான ரோஸ்லியின் உடலில் கல்லீரல் மற்றும்  சிறுநீரகம் இல்லை. இதுவே சந்தேகத்திற்குக் காரணம். உறுப்பு வியாபாரத்துக்காக பெண்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

முக்கிய குற்றவாளி  முஹம்மது ஷாபியின் கடந்தகால குற்ற தொடர்புகளும் விசாரணை அதிகாரிகளுக்கு  இத்தகைய சாத்திய கூறுகள் இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில், இலந்தூரில் கொல்லப்பட்ட பெண்களில் ஒருவரான பத்மாவின் மகன், முதல்வர் பினராயி விஜயனிடம் புகார் மனு அளித்தார்.

பத்மாவின் உடல் கடந்த 6 நாட்களாக கோட்டயம் மருத்துவக் கல்லூரியில் உள்ளது. இறந்தவரின் உடலை விடுவிக்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் கடிதம் கொடுக்கப்பட்டது. இறந்த உடலை கொண்டு செல்ல அரசு உதவி தேவை. இந்த விவகாரத்தில் அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகன் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக இதுவரை எந்தவித தலையீடும் இல்லை என உறவினர்கள் தெரிவித்தனர்.

இரட்டை நரபலி நடந்த பத்தனம்திட்டா இலந்தூரில் உள்ள பக்வால் சிங் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடந்த நாள் கிடைத்த சாட்சியங்களைத் ஆராய்ந்த பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர்களை மீண்டும் இலந்தூருக்கு அழைத்து வந்தாலே போதும் என்று முடிவு செய்யப்பட்டது.

Also see...கிருஷ்ணகிரி இளைஞரை கரம் பிடித்த தைவான் நாட்டுப் பெண்..

நேற்று குற்றவாளிகளை இலந்தூரில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து வரப்பட்டு பல மணி நேரம் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டன. கொலை செய்யப்பட்ட பெண்களின் ரத்தக்கறைகள், உடல் உறுப்புகள் என சந்தேகிக்கப்படும் 40க்கும் மேற்பட்ட ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

இவை விரிவான ஆய்வுக்கு அனுப்பப்படும். பத்மா மற்றும் ரோஸ்லிசிலியை கொல்ல கயிறு மற்றும் கத்தியை வாங்கிய இலந்தூரில் உள்ள கடைகளுக்கு  கொண்டு சென்று விசாரணை நடத்தினர். குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து வேறு ஏதேனும் பெண்களை  துன்புறுத்தல் குறித்த எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக  தெரிவித்துள்ளது.

உடல் பாகங்கள் அறுத்து பிரித்து முன் அனுபவம் வாய்ந்த விதத்தில்'; முஹம்மது ஷாபி பிணவறையில் பணிபுரிந்ததாக கூறினார். ஷாபி பெரும்பாவூரில் தங்கியிருந்த காலத்தில் ஒரு பிணவறையில் உதவியாளராகப் பணிபுரிந்ததாகக் கூறுகிறார். அந்த நேரத்தில், ​​பிரேத பரிசோதனை நடவடிக்கைகள் உள்ளிட்டவை அவர் அங்கிருந்து கற்று கொண்டதா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது .

இலந்தூர் நரபலி கொடுத்த பத்மாவின் உடலை தகனம் செய்வதற்கு முன், அறிவியல் பூர்வமாக உடல் உறுப்புகள் பிரிக்கப்பட்டதாக   தடயவியல் நிபுணர்களின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட பகவல் சிங்குக்கும், அவரது மனைவி லைலாவுக்கும் இவ்வாறு உறுப்புகளை பிரிக்கும் திறன் இருக்க வாய்ப்பு இல்லை என போலீசாரால்  கூறப்படுகிறது.

அந்த அறிக்கையின்படி, இறந்த உடலை 56 பாகங்களாக சிதைத்தவர் முதல் குற்றவாளி ஷாபி தான் என்று வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால் இதை முழுமையாக நம்ப முடியாது என்று போலீஸ் அதிகாரிகள் கருதுகின்றனர். கொலையின் போது ஒன்றுக்கும் மேற்பட்ட கத்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மனித உடலில் எந்த பாகங்கள் எளிதில் பிரிக்க முடியும் என்பதைப் புரிந்துகொண்டு கத்தி பயன்படுத்தப்பட்டுள்ளது. உடலின் சரியான அமைப்பை அறிந்தவர்களால் மட்டுமே இதைச் செய்ய முடியும். இதுபற்றி போலீசார்  கேட்கப்தற்கு முன்பே தான் பிணவறையில் பணிபுரிந்ததாக ஷாபி பதிலளித்தார்.

ஷாபி பெரும்பாவூரில் தங்கியிருந்த காலத்தில் ஒரு பிணவறையில் உதவியாளராகப் பணிபுரிந்ததாகக் கூறுகிறார். இந்த நேரத்தில் போஸ்ட்மார்ட்டம் நடைமுறைகள் உள்ளிட்டவை கற்று கொண்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மற்ற குற்றவாளிகளான பக்வால் சிங் மற்றும் லைல  ஆகியோருக்கு பலியான பெண்களின் உடல்களை சிதைக்க அறிவுறுத்தியவர் ஷாபி.

குற்றம் சாட்டப்பட்டவரின் வாக்குமூலத்தின்படி, இறந்த உடல்களை வெட்டுவதற்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியவர் ஷாபி.  உள்ளுறுப்பு உட்பட சில உடல் பாகங்களை அப்புறப்படுத்தி  சுமார் 10 நாட்கள் குளிர்சாதன பெட்டியில் பாதுகாக்கப்பட்டன. இவற்றில் சில பாகங்கள் குக்கரில் சமைக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர் வாக்குமூலம்  அளித்துள்ளார்.

உடல் உறுப்புகளை துல்லியமாக வெட்டுவதற்கு ஷஃபியால் எப்படி  முடிந்தது என்பது குறித்து விசாரிக்கப்படும். வீட்டுக்குள் ஷாபி உள்ளிட்ட கைரேகைகளும், குளிர்சாதன பெட்டிக்குள் ரத்தக்கறைகளும் காணப்பட்டன. இது இறைச்சியைப் பாதுகாப்பதற்கான ஆதாரம் என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணை முடிவு.

அதன் மாதிரிகள் விரிவான ஆய்வுக்காக அனுப்பி உள்ளன. பயன்படுத்தபட்ட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். நான்கு கத்திகள் மற்றும் ஒரு வெட்டுகத்தி கண்டெடுக்கப்பட்டது. மோப்ப நாய்கள் நடத்திய சோதனையில் வீட்டு வளாகத்தில் இருந்து எலும்பு துண்டு மீட்கப்பட்டது. இது மனித எலும்பா  என்பதை உறுதிப்படுத்த பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. டம்மியை பயன்படுத்தி கொலை செய்யப்பட்ட விதத்தையும் போலீசார் ஆய்வு செய்வார்கள்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Genital organ, Kanniyakumari, Murder, Narabali