முகப்பு /செய்தி /கன்னியாகுமரி / கன்னியாகுமரியில் ரஜினி மகள் செளந்தர்யா சாமி தரிசனம்..!

கன்னியாகுமரியில் ரஜினி மகள் செளந்தர்யா சாமி தரிசனம்..!

செளந்தர்யா ரஜினிகாந்த்

செளந்தர்யா ரஜினிகாந்த்

Soundarya Rajinikanth : ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா தனது குடும்பத்தினருடன் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanniyakumari (Kanyakumari), India

தமிழ் சினிமா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா தனது கணவருடன் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா தனது குடும்பத்தினருடன் கன்னியாகுமரிக்கு வருகை தந்தார். குமரி மாவட்டத்தில் உள்ள பகவதி அம்மன் திருக்கோவிலுக்கு கணவர் விஷாகன், மகன் வேத் கிருஷ்ணாவுடன் சென்று செளந்தர்யா சாமி தரிசனம் செய்தார்.

செளந்தர்யா அடிக்கடி பகவதி அம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம் என உடன் வந்தவர்கள் கூறினர். இன்று கன்னியாகுமரி வந்திருப்பதால் பகவதி அம்மனை தரிசனம் செய்ய வந்ததாக தெரிவித்தனர். செளந்தர்யா தயாரிப்பாளர், கிராபிக்ஸ் டிசைனர் மற்றும் இயக்குநராக தமிழ் சினிமாவில் இயங்கி வருகிறார்.

செய்தியாளர் : ஐ.சரவணன்  (நாகர்கோவில்)

First published:

Tags: Kanyakumari, Local News, Rajinikanth, Soundarya Rajinikanth, Tamil News