ஹோம் /நியூஸ் /கன்னியாகுமரி /

’‘நான் வேலை செய்த பணத்தை வாங்கி தாங்க...’ - தென்னை மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவரால் பல மணிநேரம் பரபரப்பு

’‘நான் வேலை செய்த பணத்தை வாங்கி தாங்க...’ - தென்னை மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவரால் பல மணிநேரம் பரபரப்பு

தற்கொலை மிரட்டல் விடுத்த நபர்

தற்கொலை மிரட்டல் விடுத்த நபர்

கீழே குதித்தால் மீட்க வலைகள் போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் தீயணைப்பு வீரர்கள் அமைத்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kanniyakumari, India

தமிழக- கேரளா எல்லை பாறசாலை அருகே கட்டட கட்டுமான ஒப்பந்ததாரர் தென்னை மரத்தில் ஏறி 5 மணி நேரமாக தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக கேரளா எல்லையில் கேரளா மாநிலம் பாறசாலை அருகே பாலியோடு பகுதியை சேர்ந்த சுரேஷ், கட்டட கட்டுமான ஒப்பந்த தாரர் வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள விஜயன் என்பவருக்கு ஒப்பந்த அடிப்படையில் வீடு கட்டுமான பணி ஒப்பந்தம் செய்து பணிகள் செய்து வந்த நிலையில் பணிகள் நிறைவடைந்து விஜயன் கிரக பிரவேசம் செய்து குடித்தனம் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் கட்டட ஒப்பந்த தாரர் சுரேஷ்க்கு கொடுக்க வேண்டிய மீதி தொகையான ரூ. 4 லட்சம் பணத்தை வழங்கவில்லை என கூறப்படுகிறது. ஆனால் பணிகள் பூர்த்தி செய்யாமல் இடையில் சுரேஷ் விட்டு சென்றதாக வீட்டு உரிமையாளர் விஜயன் பாறசாலை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இது சம்மந்தமாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் சுரேஷ் இன்று விஜயனின் வீட்டுக்கு சென்று மீதி பணம் தர கேட்டுள்ளார். பணம் தர மறுத்த நிலையில் திடீரென சுரேஷ் விஜயனின் வீட்டு அருகே நின்ற தென்னை மரத்தில் ஏறி பணம் தரவில்லை என்றால் தற்கொலை செய்ய போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: ஆன்லைன் சூதாட்டத்தை இனி விளையாடினால் 3 மாதம் சிறை ; ரூ.5 ஆயிரம் அபராதம்: தமிழக அரசு அதிரடி 

இதை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் பாறசாலை போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் சுரேஷை கீழே இறங்கி வர கேட்டும் மறுத்துவிட்டார். இதனையடுத்து பூவார், பாறசாலை, திருவனந்தபுரம் என நான்கு பகுதிகளில் இருந்து தீயணைப்பு படையினரை களத்தில் இறக்கி சுரேஷை கீழே இறக்க தீவிர முயற்சி செய்தும் பணம் தராமல் இறங்க மாட்டேன் என சுரேஷ் தொடர்ந்து தற்கொலை மிரட்டல் விடுத்து கொண்டே இருந்தார்.

இதனால் சுற்று வட்டார கிராம மக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பலர் அங்கு திரண்டனர். தீயணைப்பு வீரர்கள் தென்னை மரத்தில் ஏற முயலும்போது எல்லாம் கீழே குதிப்பேன் என மிரட்டியதால் சுமார் 5 மணி நேரத்திரும் மேல் அத்தனை அரசு இயந்திரங்களும் பொது மக்களும் ஒன்றுமே செய்ய இயலாத நிலைக்கு வெறும் பார்வையாளர் ஆக மட்டுமே நிற்க வேண்டிய நிலை. இதற்கிடையில் கீழே குதித்தால் மீட்க வலைகள் போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் தீயணைப்பு வீரர்கள் அமைத்தனர்.

கடைசியில் போலீஸ் அதிகாரிகள் பணம் வாங்கி தருவதாக உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து சுரேஷ் கீழே இறங்கி வந்தார். இதனை தொடர்ந்து வீட்டு உரிமையாளர் மற்றும் சுரேஷ் இடையே உள்ள பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 5 மணி நேரத்திற்கும் மேல் தென்னை மரத்தில் இருந்து ஒப்பந்ததாரர் சுரேஷ் நடத்திய போராட்டம் மற்றும் காவல்துறை, தீயணைப்பு படையினர், அரசியல் கட்சி தலைவர்கள் என அத்தனை பேரையும் தெறிக்க விட்ட சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Published by:Arunkumar A
First published:

Tags: Kanniyakumari