ஹோம் /நியூஸ் /கன்னியாகுமரி /

நோயால் பாதித்த தந்தை.. 3 கி.மீ. தோளில் தூக்கி சென்ற மகன்.. பலனில்லாமல்போன பாசப்போராட்டம்!

நோயால் பாதித்த தந்தை.. 3 கி.மீ. தோளில் தூக்கி சென்ற மகன்.. பலனில்லாமல்போன பாசப்போராட்டம்!

உயிரிழந்த தந்தை

உயிரிழந்த தந்தை

சாலை வசதியின்மை காரணமாக ஒரு உயிர் பறிபோன சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kanniyakumari (Kanyakumari) | Kanniyakumari

கன்னியாகுமரி அருகே சாலை வசதி இல்லாததால் நோயால் பாதிக்கப்பட்ட தந்தையை 3 கி.மீ தூரம் தோளில் தூக்கி சென்று மருத்துவமனையில் அனுமதித்தும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையோர கிராமமான கோலஞ்சி மடம் அடர்ந்த வன பகுதியில் சுமார் 45 ஆதிவாசி பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.

இவர்கள் தமிழக கேரள எல்லை பகுதியில் உருவாகும் கும்பாறு அல்பீசியா கூப்பு முண்டன்காணி விளை இணைக்கும் பகுதியில் கோலஞ்சி மடம் ஆதிவாசி மக்கள் கடந்து செல்ல கும்பாறு பகுதியில் பாலம் அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தற்காலிகமாக மரகட்டைகளை கொண்டு அவர்களாகவே நடந்து செல்லும் வகையில் பாலம் அமைத்துள்ளனர். அந்த பாலம் மழை காலங்களில் ஏற்படும் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்படுகிறது. ஆனாலும் தங்கள் அத்தியாவசிய தேவைக்காக அவ்வப்போது மர கட்டைகளை கொண்டு பாலம் அமைப்பார்கள்.

இந்த  பகுதியில் பாலம் கட்ட  60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முறையாக பழங்குடியின மக்கள் கருத்து கேட்காமல் தற்போது வரை அந்த பணிகள் கிடப்பில் போடபட்டுள்ளது. இந்த நிலையில் பழங்குடியின மக்கள் அமைத்த தற்காலிக மர பாலம் தற்போது பெய்து வரும் மழையால் அடித்து சென்றது. இந்த  நிலையில் கோலஞ்சிமடத்தை சேர்ந்த வேலுபாண்டியதேவர் (67) உடல் நலம் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டு வந்துள்ளார்.

இதையும் படிங்க | “அம்மா தூங்குறாங்க” - மனைவியை கொலை செய்து குழந்தைகளிடம் நாடகமாடிய கணவன்!

கும்பாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. இந்த நிலையில் இன்று ஆற்றில் தண்ணீர் வடிந்த நிலையில் அவரது மகன் தந்தையை தோளில் சுமந்த வண்ணம் சுமார் மூன்று கிலோ மீட்டர் நடந்தே சென்று வாகனத்தில் ஏற்றி பேச்சிபாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று அனுமதித்தார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியதால் செய்வதறியாது திகைத்து நின்றார். சாலை வசதியின்மை காரணமாக ஒரு உயிர் பறிபோன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published by:Anupriyam K
First published:

Tags: Death, Kanniyakumari