பொம்மையின் ஆடைகளை கழற்றி சுயஇன்பம்.. பணம் கிடைக்காத விரக்தியில் கொள்ளையன் வெறிச்செயல் - அதிரவைத்த சிசிடிவி காட்சிகள்
பொம்மையின் ஆடைகளை கழற்றி சுயஇன்பம்.. பணம் கிடைக்காத விரக்தியில் கொள்ளையன் வெறிச்செயல் - அதிரவைத்த சிசிடிவி காட்சிகள்
கொள்ளையன்
Crime news: கன்னியாகுமரியில் கொள்ளையடிக்க வந்த கடையில் பணம் இல்லாததால் ஆண் உருவ பொம்மையின் ஆடைகளை கழற்றி அதனுடன் சுய இன்பத்தில் கொள்ளையன் ஈடுபட்டது தெரியவந்ததுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஆண்கள் ஆடையகத்தில் இரவில் புகுந்த கொள்ளையன், பணம் கிடைக்காத விரக்தியில் பொம்மையுடன் சுய இன்பத்தில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் செட்டிக்குளம் பகுதியில் ஆண்கள் ஆடையகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனை குளச்சல் பகுதியை சேர்ந்த ஜோசப் பவின்(39) என்பவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் இரவு கடையை பூட்டி சென்ற நிலையில் இன்று காலையில் கடை திறக்க வந்த போது கடையின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு காணப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜோசப் பவின் கோட்டார் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில்,ஆண்கள் ஆடையகத்தின் பின்பக்க கதவை உடைந்த கொள்ளையன் கடைக்குள் சென்று பணம் உள்ளதா என பார்த்துள்ளார். பணம் எதுவும் கிடைக்காத நிலையில் சுமார் 20,000 மதிப்பிலான துணிகளை கொள்ளையடித்துள்ளது தெரியவந்தது. இந்நிலையில், கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்த போது, அங்கு விளம்பரத்தற்காக வைக்கப்பட்டிருந்த ஆண் உருவ பொம்மையின் ஆடைகளை கழற்றி அதனுடன் சுய இன்பத்தில் கொள்ளையன் ஈடுபட்டதும் தெரியவந்தது.
ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த பல்வேறு கொள்ளை சம்பவங்களில், கொள்ளையடித்த வீட்டில் குறட்டை விட்டு தூங்கியது, சமையல் செய்து நிதானமாக இருந்து சாப்பிட்டு முடித்து கொள்ளையடித்து சென்றது, போன்ற சுவாரஸ்ய கொள்ளை பின்னணிகள் நடந்துள்ள நிலையில், ஆண்பொம்மையுடன் சுய இன்பத்தில் ஈடுபட்ட கொள்ளையனின் செயல் நடந்துள்ளது. இக்கொள்ளை சம்பவம் குறித்து கோட்டார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.