ஹோம் /நியூஸ் /கன்னியாகுமரி /

ஷேர் ஷாட்டில் பழக்கம்.. தனிமையில் உல்லாசம் - காதலித்து ஏமாற்றிய ராணுவ வீரரின் திருமணத்தை நிறுத்திய காதலி

ஷேர் ஷாட்டில் பழக்கம்.. தனிமையில் உல்லாசம் - காதலித்து ஏமாற்றிய ராணுவ வீரரின் திருமணத்தை நிறுத்திய காதலி

இளம்பெண்ணை ஏமாற்றிய ராணுவ வீரர்

இளம்பெண்ணை ஏமாற்றிய ராணுவ வீரர்

Crime News : கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் காதலித்து ஏமாற்றிய ராணுவ வீரரின் திருமணத்தை  காதலி தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kanniyakumari (Kanyakumari), India

கன்னியாகுமரி மாவட்டம் மூலச்சல் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு தக்கலை சாரோடு பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் சுபின் என்பவருக்கும் இடையே ஷேர் சேட் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஷேர் ஷேட்டில் நட்பாக அறிமுகமானவர்கள் நாளடையில் காதலர்களாக மாறியுள்ளனர். இதனையடுத்து இருவருக்கும் அடிக்கடி நேரில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இளம்பெண்ணின் பெற்றோரை சந்தித்த சுபின் உங்களது மகளை காதலிக்கிறேன் திருமணம் செய்துக்கொடுங்கள் எனப் பெண் கேட்டுள்ளார். அவர்களுக்கு காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் பச்சைக்கொடி காட்டியுள்ளனர். இதனையடுத்து சுபின் அடிக்கடி இளம்பெண் வீட்டுக்கு சென்று வந்துள்ளனர். இருவரும் வீட்டில் தனிமையில் இருந்து வந்துள்ளனர்.

இந்த காதல் விவகாரம் சுபின் வீட்டிற்கு தெரியவர பிரச்னை வெடித்துள்ளது. இந்த காதலுக்கு சுபின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இருவரும் தங்களது காதலை தொடர்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஒருமாதமாக சுபின் அந்தப்பெண்ணிடம் சரியாக பேசாமல் இருந்து வந்துள்ளார்.

சென்னையில் ராணுவ பணியில் இருந்த சுபின் சொந்த ஊருக்கு வருவதாக இளம்பெண்ணிடம் கூறியுள்ளார். ஊருக்கு வந்த சுபினிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. இதனால் சந்தேகமடைந்து விசாரித்த போது சுபினுக்கு வேறொரு பெண்ணுடன் ஜனவரி 23-ம் தேதி திங்கள் அன்று திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதற்கான திருமண அழைப்பிதழ்களும் உறவினர்களுக்கு வழங்கி திருமண முன்னேற்பாடு பணிகள் நடைபெறுவதாக கிடைத்த செய்தி அந்தப்பெண்ணை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இதனையடுத்து  சுபினின் வீட்டிற்கு சென்று காதலனை தன்னுடன் சேர்ந்து வைக்குமாறு முறையிட்டுள்ளார். யாரு இவரது கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை மேலும் அவரது அங்கிருந்து துரத்தியுள்ளனர். இதனால் விரக்தியடைந்த கடந்த 22-ம் தேதி நேரடியாக மணப்பெண் வீட்டிற்கு சென்று சுபினும் நானும் காதலிக்கிறோம் எனக் கூறியுள்ளார். மேலும் இருவரும் சேர்த்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை காட்டியுள்ளார். இதனையடுத்து சுதாரித்துக்கொண்ட பெண் வீட்டார் திருமணத்தை நிறுத்தியுள்ளனர்.

மேலும் சுபின் மீது தக்கலை காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். அந்தப்புகாரில், “ சுபின் தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி தனிமையில் இருந்ததோடு தற்போது தன்னை ஏமாற்றி விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்யவுள்ளார். அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

தக்கலை காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில் போலீசார் ராணுவ வீரர் சுபின் மீது பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி  நம்பிக்கை மேசடி செய்வது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் அறிந்த சுபின் தலைமறைவான நிலையில் போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

First published:

Tags: Army man, Cheating, Crime News, Kanyakumari, Local News, Love