கன்னியாகுமரியில் உள்ள பிரசித்திபெற்ற திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் அமைச்சர் மனோ தங்கராஜ் உடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் ஆச்சார விதிமுறைகள் மீறி கோவிலுக்குள் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரியில் வரலாற்று சிறப்பு மிக்க திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் 418 ஆண்டுகளுக்கு பின்னர் வரும் ஜூலை 6 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையடுத்து கும்பாபிஷேக திருவிழா நாளை துவங்க உள்ளது.
இந்நிலையில், காவல்துறை மற்றும் அறநிலைத்துறை உட்பட அனைத்து துறை அதிகாரிகளுனான ஆலோசனை கூட்டம் தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் தலைமையில் ஆலய வளாகத்தில் நடைபெற்றது.
அப்போது, அமைச்சருடன் பாதுகாப்பு பணிக்காக வந்த குலசேகரம் காவல் ஆய்வாளர் பாலமுருகன் உட்பட காவல்துறை அதிகாரிகள் ஆச்சார விதிமுறைகளை மீறி கருவறை சுற்றம்பலத்திற்குள் சீருடையுடன் புகுந்து சாமி தரிசனம் செய்தனர். இதை பார்த்த பக்தர்கள் மிகுந்த அதிருப்தி அடைந்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கோவிலில் அமைச்சர் ஆய்வு
மேலும், ஆச்சார விதிமுறைகளை மீறிய காவல்துறை அதிகாரிகளுக்கு பக்தர்கள் கண்டனம் தெரிவித்ததோடு, இதை போன்ற விதிமீறல் நடத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கைவிடுத்தனர்.
Must Read : இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல்.. உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கும் சேலம் அதிமுகவினர்
பின்னர், இந்த விதிமீறல் குறித்து அமைச்சர் மனோதங்கராஜ் கூறுகையில், ஆலயத்திற்குள் அரசு அலுவலர்களானாலும், அரசியல்வாதிளானாலும் அனைவரும் ஆச்சார விதிமுறைகளை பின்பற்ற வேண்டுமெனவும், ஆச்சார விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
உங்கள் நகரத்திலிருந்து(கன்னியாகுமரி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.