கன்னியாகுமரி மாவட்டம் மருதங்கோடு பகுதியை சேர்ந்த இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், இது குறித்து, போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த பெண்ணை முதல் காதலனும் இரண்டாவது காதலனும் டார்ச்சர் கொடுத்தது அம்பலமாகியுள்ளது.
சூழிகோணம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்ற இளைஞரும் மருதங்கோடு பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். அந்த இளைஞரோ ரோமியோவாக சுற்றுவதும், ‘துப்பாக்கி ரஞ்சித்’ என்ற பேஸ்புக் ஐடியுடன் சிஆர்பிஎப், ஆர்மி என ஐடி வைத்துவிட்டு வெட்டியாக எந்த வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றிவருவதையும் வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார். எனவே, ரஞ்சித் உடனான காதலை இளம் பெண் துண்டித்துள்ளார்.
ஆனால், ரஞ்சித்தோ அந்த பெண்ணை விடுவதாக இல்லை. அவர் எங்கு சென்றாலும் பின் தொடர்ந்து செல்வது, டார்ச்சர் கொடுப்பது என இருந்துள்ளார். இதனால், கோபமடைந்த அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இதை எல்லாம் பொருட்படுத்தாத, அந்த இளைஞரோ டார்ச்சர் கொடுப்பதை நிறுத்தவில்லை.
மாறாக அவர்கள் இருவரும் சேர்ந்து இருப்பது போன்ற படங்களை சமூக வளைதளங்களில் பரப்பினார். ரஞ்சித்தின் செயல்களால் மண வேதனை அடைந்த அப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து அங்கு வந்த மார்த்தாண்டம் போலீசார், உடலை கைப்பற்றிய ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து இறந்த பெண்ணின் செல்போனை ஆய்வு செய்த போது, அந்த பெண்ணின் பெரியம்மா வீட்டருகே வசிக்கும் உறவினரான, தோப்புவிளை இனயம் செரின்புரூஸ் என்ற இளைஞருடன் அதிகம் நேரம் பேசியது தெரியவந்தது.
ஆறுதல் கூறவந்து காதலனான இளைஞன்
மேலும், குறுஞ்செய்தி, வாட்சப் சாட்டிங் என அதிக அளவில் இருந்துள்ளது. இதன் அடிப்படையில் அவரை பிடித்து விசாரித்த போது, ரஞ்சித் காதல் பிரச்சனைக்கு ஆறுதல் கூற வந்து இவர், அந்த பெண்ணுக்கு இரண்டாவது காதலனாக மாறியுள்ளார் என்பது தெரியவந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்த இரண்டாம் காதல் ஆறுதலாக போய்கொண்டிருந்த நிலையில், திடீரென’ பழைய காதலன் ரஞ்சித்துடன் நீ தொடர்ந்து தொடர்பில் இருக்கிறாயா’ என்ற சந்தேகத்தை செரின் புரூஸ் அந்த பெண்ணிடம் எழுப்பியுள்ளார். இது தொடர்பாக பெண்ணை அவர் டார்ச்சர் செய்து வந்துள்ளார்.
Must Read : வீட்டின் சுற்றுசுவரில் மூவர்ண தேசியக்கொடி - முன்னாள் இராணுவீரர் அசத்தல்
இதே போல், ரஞ்சித்தும் ‘புதிய காதலன் கிடைத்ததால் என்னை விட்டு சென்றாயா’ என கூறி அந்த பெண்ணை டார்ச்சர் செய்துள்ளார். இருவரின் டார்ச்சரால் அந்த பெண் தற்கொலை செய்து கொண்ட தாக போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இந்நிலையில், செரின் புரூசை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், தலைமறைவாக இருக்கும் ரஞ்சித்தை தேடி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Kanniyakumari, Love issue, Suicide