கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று அதிகனமழை பெய்யக்கூடும் என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கன்னியாகுமரி, நீலகிரி மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 4 குழுக்கள் சென்றுள்ளன.
நெல்லை, குமரி, தென்காசி மாவட்டங்களில் நேற்று அதிகனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில், நாகர்கோவில், சுசீந்திரம், தாழக்குடி, பூதப்பாண்டி உள்ளிட்ட பகுதிகளில் 4 மணிநேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. இதனால், சாலைகளில் தண்ணீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகினர்.
கனமழை காரணமாக, கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, திற்பரப்பு அருவியிலும் தடுப்பு வேலிகளைத் தாண்டி, தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால், மெயின் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தின் மலையோர பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு, பகல் என நாள்முழுவதும் கொட்டி தீர்த்த கனமழையின் காரணமாக அணைகள் ஆறுகள் என அனைத்தும் நிரம்பு வருகின்றன. கோதையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக, குற்றால மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
Must Read : திருமணம் ஆன 4 மாதத்தில் மனைவியை வனப்பகுதிக்கு அழைத்துச்சென்று கழுத்தை அறுத்து கொன்ற கணவன்..
கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி மாவட்டங்களில் இன்று அதி கனமழை வரை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேபோல, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் மிக கனமழையும், 12 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, நீலகிரி மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 4 குழுக்கள் சென்றுள்ளன. வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு உள்ளிட்டவை ஏற்படும்போது, துரிதமாக செயல்படுவதற்காக அதிநவீன படகு மற்றும் மீட்பு உபகரணங்களை எடுத்துச் சென்றுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanyakumari, Rain, School Holiday, School students