ஹோம் /நியூஸ் /கன்னியாகுமரி /

ஆசிட் கலந்த குளிர்பானத்தை குடித்த சிறுவன் மரணம்.. சிபிசிஐடி-க்கு வழக்கு மாற்றம்

ஆசிட் கலந்த குளிர்பானத்தை குடித்த சிறுவன் மரணம்.. சிபிசிஐடி-க்கு வழக்கு மாற்றம்

குளிர் பானத்தில் ஆசிட்

குளிர் பானத்தில் ஆசிட்

Kanniyakumari | குமரியில் ஆசிட் கலந்த குளிர்பானத்தை குடித்த சிறுவன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kanniyakumari, India

கன்னியாகுமரி மாவட்டம் மெதுகும்மல் பகுதியை சேர்ந்தவர் சுனில். இவரது 11வயது மகன் அஸ்வின் அதங்கோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 6ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 24-ம் தேதி தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்கு சென்றுவிட்டு தேர்வு எழுதி முடிந்து மதியம் வீட்டிற்கு வர வேண்டி நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு அதே பள்ளி சீருடையில் வந்த மாணவன் ஒருவர் 6 ம் வகுப்பு மாணவனிடம் குளிர்பானம் ஒன்றை கொடுத்து குடிக்க கூறி உள்ளதாக கூறப்படுகிறது.

அதனை அந்த சிறுவனும் நம்பி குடித்து கொண்டிருந்த போது பின்னால் இருந்து ஓடி வந்த சிறுவன் ஒருவன் மோதி உள்ளான் இதில் குளிர்பான பாட்டில் கீழே விழுந்துள்ளது. இதனை தொடர்ந்து அந்த மாணவன் வழக்கம்போல் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் இருந்த சிறுவனுக்கு இரவு நேரத்தில் திடீரென குளிர்காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுவனை அழைத்துக்கொண்டு மார்த்தாண்டம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று காய்ச்சலுக்கு மருந்து வாங்கி வந்துள்ளனர்.

இருந்தும் சிறுவனுக்கு காய்ச்சல் குறையாமல் இருந்துள்ளது. மேலும் சிறுவனின் வாய் நாக்கு உள்ளிட்ட பகுதிகளில் புண்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுவனை அழைத்துக்கொண்டு கேரளா மாநிலம் நெய்யாற்றின்கரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

Also see... சாலையில் தாறுமாறாக பைக் ஓட்டிய இளைஞர்.. சிக்னலில் வெளுத்து எடுத்த பெண் - வைரலாகும் வீடியோ

அங்கு சிறுவனை மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது சிறுவன் அருந்திய குளிர்பானத்தில் ஆசிட் கலந்து கொடுக்கப்பட்டுள்ளது தெரியவந்ததோடு சிறுவனின் இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்து இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து சிறுவனின் பெற்றோர் களியக்காவிளை போலீசில் புகார் அளித்துள்ளனர்.

பள்ளியில் படிப்பில் ஏற்பட்ட போட்டியா அல்லது வேறு காரணமா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு குளிர்பானத்தில் விஷம் கொடுத்த மாணவனை பற்றி விசாரணை நடந்து வந்த நிலையில் அந்த மாணவன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.  இந்த வழக்கில் போலீசார் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வந்த நிலையில் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Crime News, Kanniyakumari