Home /News /kanniyakumari /

அசுரவேகத்தில் கார் மோதியதில் பறந்த ஆட்டோ.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

அசுரவேகத்தில் கார் மோதியதில் பறந்த ஆட்டோ.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

சிசிடிவி காட்சிகள்

சிசிடிவி காட்சிகள்

Kanniyakumari | தொடுபுழாவில் அசுரவேகத்தில் வந்த கார் மோதியதில் பறந்த ஆட்டோவால் ஏற்பட்ட விபத்தில் காருக்கும் - ஆட்டோவிற்கும் நடுவில் மாட்டிக்கொண்ட பெண் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அதன்  பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanniyakumari, India
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழாவில் மது போதையில் இடுக்கி -புளியமலை  சாலையில் அசுர வேகத்தில் வந்த சொகுசு கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் மோதி அரசு பேருந்து நிலையத்தின் முன் வாயில் பகுதியில் உள்ள மின்கம்பத்தில் இடித்து நின்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தின் போது அசுர வேகத்தில் வந்த கார் மோதியதில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ பறக்கும் அதே வேளையில் காருக்கும் ஆட்டோவுக்கும் நடுவே மாட்டிக் கொண்ட பெண் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயர்த்தப்பியுள்ளார். இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் மற்றும் மதுபோதையில் இருந்த கார் ஓட்டுநர் சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

Also see... அசல் சான்றிதழ்கள் இல்லாததால் மருத்துவ படிப்பை தொடர முடியவில்லை - உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் வேதனை

தொடர்ந்து இடுக்கி பகுதியை சார்ந்த பேங்க் ஊழியரான கார் டிரைவரை இடுக்கி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நொடி பொழுதில், நடந்த விபத்திலிருந்து நூலிழையில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்ணின் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Accident, CCTV Footage, Kanniyakumari

அடுத்த செய்தி