முகப்பு /செய்தி /கன்னியாகுமரி / தமிழ் தெரியாத வடமாநில ரயில்வே ஊழியர்... வாக்குவாதம் செய்த பயணிகள்..! - வைரலாகும் வீடியோ

தமிழ் தெரியாத வடமாநில ரயில்வே ஊழியர்... வாக்குவாதம் செய்த பயணிகள்..! - வைரலாகும் வீடியோ

பயணிகளை ஒருமையில் பேசும் ரயில்வே ஊழியர்

பயணிகளை ஒருமையில் பேசும் ரயில்வே ஊழியர்

Kanniyakumari News : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டர்களில் வடமாநிலத்தை சேர்ந்த ஊழியருடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஏற்படும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanniyakumari, India

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து மும்பை, டெல்லி, ஜம்மு காஷ்மீர், குஜராத் கேரளா, சென்னை உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ரயில் நிலையத்தில் உள்ள டிக்கட் கவுண்டர்களில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் இருப்பதால் தமிழ் மட்டுமே தெரிந்த பயணிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. இதில் பெரும்பாலும் தமிழ் தெரிந்தாலும் அவர்கள் தமிழில் பேசாமல் ஹிந்தியில் மட்டுமே பேசுவதாக கூறப்படுகிறது.

இதனால் பயணிகள் முன்பதிவு குறித்த சந்தேகங்களை சரியாக புரிந்துகொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் ஊழியர்களுக்கும், பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுவதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.

இந்நிலையில், நாகர்கோவில் ரயில்வே கவுண்டரில் பயணி ஒருவருக்கும், ஊழியருக்கும்  இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருமையில்  திட்டிக்கொள்ளும் வீடியோ ஒன்று வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் : சரவணன் -  நாகர்கோவில்

First published:

Tags: Kanniyakumari, Local News, Southern railway