Home /News /kanniyakumari /

ராகுல் காந்தி 2வது நாளாக பாத யாத்திரை: மாணவி அனிதாவின் குடும்பத்தினர் பங்கேற்பு

ராகுல் காந்தி 2வது நாளாக பாத யாத்திரை: மாணவி அனிதாவின் குடும்பத்தினர் பங்கேற்பு

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

Bharat Jodo Yatra: 2-வது நாளான இன்று அகஸ்தீஸ்வரத்தில் இருந்து ராகுல் காந்தி  நடை பயணத்தை தொடங்கினார்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanniyakumari, India
    காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தமிழகத்தில் 2வது நாளாக தனது பாத யாத்திரையை மேற்கொண்டு வருகிறார்.

    கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சுமார் 3500 கிலோ மீட்டர் தூரத்திற்கு "பாரத் ஜோடோ" என்ற யாத்திரையை காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி தொடங்கியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ராகுல் காந்தியிடம் தேசிய கொடியை கொடுத்து நேற்று இந்த பாத யாத்திரையை தொடங்கி வைத்தார்.

    காந்தி நினைவு மண்டபம் முன்பாக தொடங்கிய இந்திய ஒற்றுமை பயணம், 600 மீட்டர் தொலைவில் உள்ள, கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடையில் நிறைவடைந்தது. பின்னர், அகஸ்தீஸ்வரத்தில் உள்ள விவேகானந்தா கல்லூரி மைதானத்துக்கு சென்ற ராகுல் காந்தி, அங்கு கேரவனில் ஓய்வு எடுத்தார். 2-வது நாளான இன்று அகஸ்தீஸ்வரத்தில் இருந்து ராகுல் காந்தி  நடை பயணத்தை தொடங்கினார். முன்னதாக தேசிய கொடியையும் அவர் ஏற்றி வைத்தார்.

    ராகுல் காந்தியுடன் அனிதாவின் தந்தை மற்றும் சகோதரர்


    நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் தந்தை சண்முகம் மற்றும் சகோதரர்  அருண்குமார் ஆகியோரை ஜோதிமணி எம்.பி. ராகுல் காந்தியிடம் அறிமுகம் செய்து வைத்தார்.  இருவரும் ராகுல் காந்தியுடன் பாத யாத்திரையில் பங்கேற்றுள்ளனர். 

    இதையும் படிங்க: பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ள சென்ட்ரல் விஸ்டா வளாகத்தின் பிரமிக்க வைக்கும் கழுகு பார்வை வீடியோ

    இதனிடையே, ராகுல் காந்தியின் ஒற்றுமை இந்தியா நடைபயணம் கன்னியாகுமரி - நாகர்கோவில் சாலை வழியாக செல்வதால், சுற்றுலா தலமான கன்னியாகுமரி செல்லும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,  அஞ்சுகிராமம் வழியாக கன்னியாகுமரிக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Congress, Kanniyakumari, Rahul gandhi

    அடுத்த செய்தி