ஹோம் /நியூஸ் /கன்னியாகுமரி /

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இந்த பொருட்கள் எடுத்து செல்ல தடை... தேவசம்போர்டு அறிவிப்பு...

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இந்த பொருட்கள் எடுத்து செல்ல தடை... தேவசம்போர்டு அறிவிப்பு...

சபரிமலை

சபரிமலை

Kerala Sabarimala | வெர்ச்சுவல் கியூ உள்ளதால் இனி பக்தர்களின் எண்ணிக்கையை சரியாக எடுக்க முடியும். ஆன்லைன் புக்கிங் காரணமாக சபரிமலையில் குற்றங்கள் குறைந்துள்ளன.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Kerala, India

பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் மண்டல மகர விளக்கு கால பூஜைகளின்போது செயல்படுத்தப்படவுள்ள ஏற்பாடுகள் தொடர்பாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன், உறுப்பினர் தங்கப்பன் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி சுனில் ஆகியோர் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன் கூறுகையில், “கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சபரிமலையில் பக்தர்கள் தரிசனம் நடத்துவதில் சிரமம் இருந்து வந்தது. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்த்தப்பட்டதால் சபரிமலை மண்டல கால மகரவிளக்கு பூஜைக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

கடந்த மாத பூஜைக்கு சபரிமலை நடை திறக்கப்பட்டபோது தென் மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வந்திருந்தார்கள். சபரிமலைக்கு தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மற்றும் கேரள பக்தர்கள் அதிக அளவு வருவார்கள். இந்த ஆண்டு மண்டல கால மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர் 16-ம் தேதி மாலை நடை திறக்கப்படும்.

இதையும் படிங்க : தமிழகத்தில் 8-ம் தேதி வரை மழை தொடரும் : வானிலை மையம் எச்சரிக்கை!

அன்று மாலையிலேயே பக்தர்கள் சன்னிதானத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். மலையாள மாதமான விருட்சிகம் 1-ம் தேதியான நவம்பர் 17-ம் தேதி அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். மண்டலகால பூஜைக்காக டிசம்பர் 27-ம் தேதி வரை நடை திறந்திருக்கும்.

அதன்பிறகு மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ம் தேதி மீண்டும் சபரிமலை நடை திறக்கப்படும். மகரவிளக்கு ஜோதி வழிபாடு ஜனவரி 14-ம் தேதி  நடைபெறும். ஜனவரி 20-ம் தேதி வரை நடை திறந்திருக்கும்.

திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன், உறுப்பினர் தங்கப்பன் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி சுனில் ஆகியோர் நாகர்கோவிலில் அளித்த பேட்டி

கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் இந்த ஆண்டு அதிக அளவு பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். சபரிமலை வரும் அனைத்து பக்தர்களுக்கும் ஆன்லைன் புக்கிங் அவசியம். கடந்த காலங்களில் ஆன்லைன் முன்பதிவு கேரள போலீஸ் கவனித்து வந்தது. இப்போது, ஆன்லைன் புக்கிங் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் நடந்து வருகிறது. ஆன்லைனில் புக்கிங் செய்ய தவறியவர்களுக்காக சபரிமலையில் 12 இடங்களில் ஸ்பார்ட் புக்கிங் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுள்ளன.

அதில் நிலக்கலில் மட்டும் 10 ஸ்பாட் புக்கிங் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கேரளாவின் அனைத்து மாவட்டங்களிலும் ஸ்பாட் புக்கிங் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வெர்ச்சுவல் கியூ காரணமாக எந்த காலதாமதமும் ஏற்படாது. ஆன்லைன் புக்கிங் செய்ய ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போட் ஆகியவற்றில் எதாவது ஒன்று கையில் வைத்திருந்தால் போதும்.

இதையும் படிங்க : ஆவின் பால் விலை உயர்வு இவர்களுக்கு மட்டும்தான்!

சபரிமலையிலும், பம்பையிலும் அன்னதானம் வழங்க ஏற்பாடுகளை தேவசம்போர்டும், ஐயப்பா சேவாசங்கம் ஆகியவை ஏற்பாடு செய்துள்ளன. ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக நிலக்கல், பம்பை, சன்னிதானங்களில் மொத்தம் 2445 டாய்லெட்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கோயில் ஆசாரங்கள் அனைத்தும் முறைப்படி நடைபெறும். படிபூஜை, புஷ்பாபிஷேகம் ஆகியவை முறைப்படி செய்ய ஏற்பாடு செய்யப்படுள்ளது. தட்டுப்பாடு இல்லாமல் அப்பம், அரவணை பிரசாதங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரவணை தயாரிப்பு இப்போதே தொடங்கிவிட்டன. தினசரி தயாரிக்கும் அப்பம் பிரசாதமாக வழங்கப்படும்.

சபரிமலை முன்னேற்பாடுகள் சம்பந்தமான ஆலோசனை தென்னிந்திய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அதில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் பேருந்து ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் இருந்து மட்டும் 500 சிறப்பு பஸ்கள் இயக்கபடுகின்றன. அதில் நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு 200 பஸ்கள் இயக்கப்படுகின்றன. நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு ஒரு நிமிடத்துக்கு ஒரு பஸ் வீதம் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 300 பஸ்களும் கேரளாவின் பிற பகுதிகளில் இருந்து நிலக்கல்லுக்கு இயக்கப்படும். 40-க்கு குறையாத பக்தர்கள் குழுவாக வந்தால் அவர்களுக்காக சிறப்பு பேருந்து வசதி ஏற்படுத்தப்படும்.

மாற்றுதிறனாளிகளுக்கு சிறப்பு பஸ் இயக்க முடிவு செய்யப்படுள்ளது. மகரவிளக்குக்கு தினத்தில் 1000 பஸ்கள் இயக்க முடிவு செய்துள்ளோம். பம்பா நதியில் புனித நீராடுவதற்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடுமையான வெள்ள அபாய எச்சரிக்கை இருந்தால் மட்டுமே பம்பையில் நீராட தடை விதிக்கப்படும். பம்பையில் ஷவர் குளியலுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறு வாகனங்களில் வருபவர்கள் பம்பை பம்பையில் பக்தர்களை இறக்கி விட்டுவிட்டு திரும்பி வந்து நிலக்கல்லில் கார்பார்க்கிங் செய்யலாம். பெருவழிபாதையான எருமேலியில் இருந்து கரிமலை வழியாக செல்லும் கானன பாதையும், புல்மேடு வழி ஆகியவை திறக்கப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அங்கு வனத்துறை சார்பில் மெடிக்கல், குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வழியில் பக்தர்கள் விரி வைத்து தங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக பம்பையில் தற்காலிக பந்தல் ஏற்படுத்தப்பட உள்ளது. எருமேலி, நிலக்கல், செங்கனூர், களக்கூட்டம் ஆகிய பகுதிகளில் 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பக்தர்கள் வசதிக்காக இடைத்தங்கலுக்கான கட்டடங்கள் கட்டப்பட உள்ளது.

இருமுடி கட்டுகளில் பிளாஸ்டிக் இல்லாமல் இருக்கும் வகையில் பக்தர்கள் கவனம் எடுக்க வேண்டும். பம்பை ஆற்றில் ஆடைகளை விடுவதையும் பக்தர்கள் தவிர்க்க வேண்டும். பம்பையில் பலிதர்ப்பணங்கள் செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தினமும் ஒரு லட்சம் பக்தர்கள் வர வாய்ப்பு உண்டு என எதிர்பார்க்கிறோம்.

வெர்ச்சுவல் கியூ உள்ளதால் இனி பக்தர்களின் எண்ணிக்கையை சரியாக எடுக்க முடியும். ஆன்லைன் புக்கிங் காரணமாக சபரிமலையில் குற்றங்கள் குறைந்துள்ளன. சபரிமலையில் பொருட்களை கொண்டுசெல்ல ரோப் வே ஏற்படுத்த 10 ஏக்கர் நிலத்தை வனத்துறை வழங்கியுள்ளது.

அதற்கு பதிலாக இடுக்கி மாவட்டத்தில் சின்னக்கரையில் 10 ஏக்கர் நிலத்தை வனத்துறைக்கு அரசு வழங்கியுள்ளது. சபரிமலையில் ரயில் பாதைக்காகவும், எருமேலியில் ஏர்ப்போர்ட் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படு வருகிறது" என்றார்.

இதையும் படிங்க : 8 ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் மீண்டும் குறைந்தது... பயணிகள் மகிழ்ச்சி!

மேலும், “சபரிமலைக்கு வரும் பக்தர்கள் இருமுடி கட்டிற்குள் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கவேண்டும். இதனால் வனவிவங்குகள் பாதிக்கப்படுகிறது. பக்தர்கள் பம்பையில் தங்கள் உடைகளை வீசி மாசாக்குவதை தவிர்க்கவேண்டும். நாளொன்றிற்கு எவ்வளவு பக்தர்கள் வேண்டுமானாலும் வரலாம். அதற்கான கட்டுப்பாடுகள் இல்லை” எனவும் அவர் தெரிவித்தார்.

Published by:Karthi K
First published:

Tags: Ayyappan temple in Sabarimala, Kerala. Sabarimala, Plastic Ban