ஹோம் /நியூஸ் /Kanniyakumari /

தம்பதியினர் போல் நாடகமாடி சூட்கேசில் கஞ்சா கடத்தல்.. குமரியில் 15 கிலோ கஞ்சா பறிமுதல்

தம்பதியினர் போல் நாடகமாடி சூட்கேசில் கஞ்சா கடத்தல்.. குமரியில் 15 கிலோ கஞ்சா பறிமுதல்

சூட்கேசில் கஞ்சா கடத்தல்

சூட்கேசில் கஞ்சா கடத்தல்

Kanyakumari : கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கஞ்சா கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் தம்பதியினர் போல் நாடகமாடி சூட்கேசில் கஞ்சா கடத்தி செல்ல முயன்ற போலி தம்பதியினர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 15 கிலோ கஞ்சா மற்றும் 60 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

குமரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கஞ்சா கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், மார்த்தாண்டம் வழியாக மிகப்பெரிய அளவில் கஞ்சா கடத்த இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் தனிப்படை போலீசார் மார்த்தாண்டம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியை தீவிரப்படுத்தி இருந்தனர்.

இந்நிலையில், மார்த்தாண்டம் பேருந்து நிலையத்திற்குள் பெரிய அளவிலான உருட்டி செல்லும் சூட்கேசுடன் ஒரு பெண் மற்றும் ஆண் ஆகியோர் சந்தேகத்திற்கிடமான முறையில் அங்குமிங்குமாக சுற்றி திரிந்துள்ளனர். அவர்களை கண்ட போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்த போது அவர்கள் தம்பதியினர் என கூறி உள்ளனர் மேலும் அவர்களுடைய முகவரி கேட்ட போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் இருவரையும் மார்த்தாண்டம் காவல்நிலையம் அழைத்து வந்து, அவர்களிடத்தில் இருந்த சூட்கேசை சோதனை செய்த போது, அதில் சுமார் 15 கிலோ மதிப்பிலான கஞ்சா இருந்தது தெரியவந்தது மேலும் அவர்கள் தம்பதியினர் இல்லை என்றும் தெரியவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது, அந்த பெண் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும் அவரது பெயர் அஜந்தா (32) என்றும் தான் எடுத்து வந்த கஞ்சாவை குமரி மாவட்டத்தில் உள்ள சிறு சிறு வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய கொண்டு வந்ததும் தெரியவந்தது.

Must Read : வரதட்சணை கேட்டு காதல் கணவன் கொடுமை -இரண்டே மாதத்தில் கசந்த 7 ஆண்டு காதல்.. இளம்பெண் தற்கொலை

மேலும், அதற்கு உதவியாக குமரி மாவட்டம் கண்ணனூர் பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரன் 25 என்பவர் இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்த 15 கிலோ கஞ்சா மற்றும் 60 ஆயிரம் ருபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்.

Published by:Suresh V
First published:

Tags: Cannabis, Kanyakumari, Smuggling