ஹோம் /நியூஸ் /கன்னியாகுமரி /

தடுத்து நிறுத்திய போலீஸ்.. நடுரோட்டில் அமர்ந்த தேமுதிகவினர்.. பேசி முடித்த பிரேமலதா!

தடுத்து நிறுத்திய போலீஸ்.. நடுரோட்டில் அமர்ந்த தேமுதிகவினர்.. பேசி முடித்த பிரேமலதா!

தேமுதிக போராட்டம்

தேமுதிக போராட்டம்

பிரேமலதா விஜயகாந்துக்கு வரவேற்பு கொடுக்க ஊரம்பு பகுதியில் இருந்து நடைக்காவுக்கு தே.மு.தி.க.வினர் இருசக்கர வாகனங்களில் பேரணியாக வந்தனர். அப்போது அனுமதியின்றி பேரணி நடத்தியதாக போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், ஆத்திரமடைந்த தே.மு.தி.க.வினர் நடைக்காவு சந்திப்பில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kanniyakumari, India

குமரி மாவட்டத்தில் பல்வேறு கட்சி நிகழ்வுகளில் கலந்து கொள்ள பிரேமலதா விஜயகாந்த் சென்னையில் இருந்து விமானம் மூலமாக திருவனந்தபுரம் வந்து அங்கிருந்து தனி வாகனத்தில் சாலை மார்க்கமாக குமரி மாவட்டத்திற்கு வந்தார். அப்போது அவருக்கு தமிழக கேரள எல்லையான ஊரம்பு பகுதியில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து புதுக்கடை பகுதிக்கு வந்தார். விழாவில் கலந்துகொள்ள வந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்தை வரவேற்று தேமுதிகவினர் பேரணியாக வந்தனர். இதனை போலீசார் தடுத்து நிறுத்தியதால் போலீசாருக்கும்  தேமுதிகவினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதனால் கோபமடைந்த தேமுதிகவினர் நடைக்காவு சந்திப்பில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால்  அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கு வந்த பிரேமலதா விஜயகாந்த் போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.

விழாவில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த்,”  திமுக இந்தி திணப்பை எதிர்ப்பதை வரவேற்கிறோம். அவர்களின் நிலைப்பாடுதான் எங்களோட நிலைப்பாடும். எந்த மொழியையும் நாங்கள் எதிர்க்கவில்லை. இந்தி திணிப்பு என்பதை தடுப்பதே எங்கள் நிலைப்பாடு. இன்றைக்கு எல்லா மொழியையும் யார் வேண்டுமானாலும் கத்து கொள்ளலாம். அது அவரவர் விருப்பம். ஆனால் திணிக்கமுடியாது. தமிழ்நாட்டில் ஹிந்தியை கட்டாயம் படித்துதான் ஆக வேண்டும் என்று திணிக்க முடியாது என திமுக கூறுகிறது. அதேதான் தேமுதிகவின் நிலை” என்று கூறினர்.

மேலும்மது ஒழிப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், “மது ஒழிப்பு என்பது இவர்கள் ஆட்சிக்கு வரும்போது அவர்களையும் அவர்கள் ஆட்சிக்கு வரும்போது இவர்களையும் மாறி மாறி குறைக்கூறி கொண்டே இருக்கிறார்கள். ஆட்சிக்கு வராத பிற கட்சியினர் இத்தனைகோடி ருபாய் விற்பனை என்பதே தலைக்குனிவாக வெட்கக்கேடாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். அவரவர் கட்சியை சேர்ந்தவர்களை குடிப்பதை நிறுத்த சொன்னாலே நிச்சயமாக படிப்படியாக மது விற்பனை குறையும்” என்றார்.

பிரேமலதா விஜயகாந்த்

அதனைத் தொடர்ந்து, “ வருகின்ற தேர்தலில் விஜயகாந்த் போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு நாங்கள் விரைவில் சொல்வதாக கூறி சென்றார்”.

Also see... சந்திரகிரகணம் 2022: பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரங்கள் யார் யார்?

Published by:Vaijayanthi S
First published:

Tags: DMDK, DMK, Kanniyakumari, Premalatha Vijayakanth