முகப்பு /செய்தி /கன்னியாகுமரி / பாஜகவிற்கு அதிமுக ஒன்றுபட்டால்தான் கொண்டாட்டம்... கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

பாஜகவிற்கு அதிமுக ஒன்றுபட்டால்தான் கொண்டாட்டம்... கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

பொன்.ராதாகிருஷ்ணன்

பொன்.ராதாகிருஷ்ணன்

Pon.Radhakrishnan : பாஜகவிற்கு ஊர் ஒன்றுபட்டால் தான் கொண்டாட்டம் என கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanniyakumari, India

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில்  பல தலைமுறையினர்  வணங்கி வரும் ஆஞ்சநேயர் திருக்கோவிலில் புதிய கோவில் கட்டுமான பணி துவக்க நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார்.  அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பொன். ராதாகிருஷ்ணன் கூறுகையில், “அரசியல் கட்சி தேர்தலில் போட்டியிடவேண்டும். மாற்று கருத்து இல்லை. காலச்சூழலுக்கேற்ப தான்போட்டியிடவேண்டும். திமுகவும், அதிமுகவும்  பல இடைத்தேர்தல்களில் போட்டியிடவில்லை. ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவது குறித்து முடிவெடுக்க மாநில தலைவர் அண்ணாமலைக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பாஜக பல்வேறு மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அந்த கட்சிகளை அழித்த வரலாறு நாட்டுக்கும், எங்களுக்கும் தெரியும் என முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறியுள்ளார். இது கட்சியின் கருத்தல்ல என அதிமுக தலைமை  அறிக்கை வெளியிட்ட பல நிகழ்வுகள் நடந்துள்ளது என்பதை நினைவு கூறுகிறேன். ஈரோடு தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் வெல்வார் என்று கூறுவதை ஏற்றுகொள்ள முடியாது. இதுவரை 16 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். யாராவது தோல்வி அடைவேன் என கூறுவார்களா? ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என கூறுவதுண்டு.

பாஜகவிற்கு ஊர் ஒன்றுபட்டால் தான் கொண்டாட்டம் என்பதை  உணர்ந்துதான் பாஜக அதிமுகவை இணைக்கும் முயற்சியை மேற்கொண்டுவருகிறது. அதிமுகவை பாஜக பிளவுப்படுத்த முயல்வதாக கூறபடுவதை பொறுத்தவரையில் திமுகவிலிருந்து அதிமுக உருவாவதற்கு பாஜகவா காரணமாக இருந்தது. பழைய சரித்திரத்தை கூறினால் திமுகவினர் அசிங்கபட்டுபோவார்கள்” என கூறினார்.

First published:

Tags: ADMK, BJP, Kanniyakumari, Pon Radhakrishnan, Tamilnadu