குமரி மாவட்ட தமிழக கேரள எல்லை பகுதி வழியாக கேரளாவுக்கு ரேசன் அரிசி, மண்ணெண்ணெய் போன்றவை கடத்தி செல்வது தொடர் கதையாக இருந்து வரும் நிலையில் அதனை தடுக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எல்லை பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைத்தும் தனிப்படைகள் அமைத்தும் கண்காணிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. ஆனால் கடத்தல் காரர்கள் தங்களது கடத்தல் தொழிலை துரிதமாக செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலையில் நித்திரவிளை காவல்நிலைய தனிப்பிரிவு ஏட்டு ஜோஸ் மற்றும் காவலர்கள் சாத்தன்கோடு பகுதியில் நின்று கொண்டிருந்த போது அந்த வழியாக கேரள பதிவெண் கொண்ட ஒரு சொகுசு கார் மற்றும் அதன் பின்னால் மீன் ஏற்றி செல்வது போல் மினி டெம்போ ஒன்றும் வந்துள்ளது.
அதனை கண்ட போலீசார் அந்த வாகனங்களை தடுத்து நிறுத்த முயன்ற போது இரண்டு வாகனங்களும் நிற்காமல் சென்றுள்ளது. இதனையடுத்து போலீசார் அந்த வாகனங்களை பின்தொடர்ந்து விரட்டி சென்று நடைக்காவு சந்திப்பு பகுதியில் வைத்து மடக்கி பிடித்தனர். உடனே ஒரு வாகனத்தில் இருந்த ஓட்டுநர் தப்பி ஓடினார். அவரை தொடர்ந்து இன்னொரு டிரைவரும் தப்பிக்க முயன்ற போது சுதாரித்து கொண்ட போலீசார் அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்து வைத்து கொண்டு வாகனங்களை பரிசோதனை செய்த போது அதில் சுமார் 4 டன் மதிப்பிலான ரேசன் அரிசிகள் இருந்தது தெரியவந்தது.
Also see... மீண்டும் காவி நிறத்தில் திருவள்ளுவர் படம்... கோவையில்
இதனையடுத்து போலீசார் அந்த வாகனங்களை அரிசியுடன் பறிமுதல் செய்து காவல்நிலையம் கொண்டு வந்து பிடிபட்ட டிரைவரிடம் நடத்திய விசாரணையில் அதில் இருந்த ரேசன் அரிசி முழுவதும் வள்ளியூர் பகுதியில் இருந்து எடுத்து வரப்பட்டது என்றும் தமிழக கேரள எல்லை பகுதியான கொல்லங்கோடு வழியாக கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதனையடுத்து பிடிபட்ட டடிரைவரான மஞ்சாலுமூடு பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவரையும் அரசி மற்றும் வாகனங்களை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanyakumari, Ration Goods, Rice