தமிழ்நாடு கலாசாரம் மிகவும் பிடித்துபோனதாக நாகர்கோவில் வாலிபரை மணந்த பிலிப்பைன்ஸ் பட்டதாரி பெண் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தேசமணிநகர் பகுதியை சேர்ந்த குணசீலன் - மெர்சி தம்பதியினரின் மகன் ஜெமி ரென்ஸ்விக் (25) ஆராய்ச்சி படிப்பில் டாக்டர் பட்டம் பெற்றவர். பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த மின்டோனா பகுதியை சேர்ந்த ஜிம்மி ஜமீலா - மெரிட்டா ஜமீலா தம்பதியரின் மகள் லாலைன் எம்.பி.ஏ. பட்டதாரி ஆவார். இந்த நிலையில் கன்னியாகுமரி வந்த லாலைனுக்கு, ஜெமி ரென்ஸ்விக் மேல் காதல் மலர்ந்துள்ளது. தமிழ்நாடு கலாச்சாரத்தின் மேல் காதல் வசப்பட்ட லாலைன் தமிழரை கரம் பிடிக்க ஆசைப்பட்டுள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் தன் காதலை ஜெமி ரென்ஸ்விக்கிடம் தெரியப்படுத்தவே, அவரும் லாலைன் காதலுக்கு பச்சை கொடி காட்டியுள்ளார்.
இருவரும் மகிழ்ச்சியாக 4 ஆண்டு காலமாக அவர்களது காதலை வளர்த்து வந்த நிலையில் ஒரு கட்டத்திற்கு மேல் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு இறுதியில் அவர்கள் இருவீட்டரின் சம்மதத்துடன் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் புதுமண தம்பதியினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நாகர்கோவிலில் நடைபெற்றது.
இது குறித்து பேசிய மணப்பெண், எனக்கு சிறுவதில் இருந்தே இந்திய நாட்டின் மீது ஒரு தனிமரியாதை உண்டு. இங்குள்ள கலாசாரம், பழக்க வழக்கம் எனக்கு பிடிக்கும். அதனை நான் கன்னியாகுமரிக்கு வந்தபோது உணர்ந்தேன். தமிழ்நாடு கலாசாரமும், இங்குள்ள மக்களின் அன்பான அரவணைப்பும் எனக்கு மிகவும் பிடித்துபோனது என்று கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Couple, Kanniyakumari, Local News, Nagercoil, Philippines