ஹோம் /நியூஸ் /கன்னியாகுமரி /

குமரி பகவதியம்மன் கோயில் திருவிழாவில் பரிவேட்டை நிகழ்ச்சி.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..

குமரி பகவதியம்மன் கோயில் திருவிழாவில் பரிவேட்டை நிகழ்ச்சி.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..

குமரி பகவதியம்மன் கோயில் திருவிழாவில் பரிவேட்டை நிகழ்ச்சி

குமரி பகவதியம்மன் கோயில் திருவிழாவில் பரிவேட்டை நிகழ்ச்சி

Kanniyakumari | கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வான பரிவேட்டை நிகழ்ச்சி ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Kanniyakumari, India

  கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா கடந்த 26-ம் தேதி தொடங்கியது. ஒவ்வொரு நாளும் காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் மாலையில் வெள்ளிக்கலைமான், வெள்ளி காமதேனு உட்பட வெள்ளிப் பல்லக்குகளில் வீதி உலா நிகழ்வும் நடைபெற்றது. நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வான பரிவேட்டை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

  முன்னதாக அதிகாலையில்  அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அதனை தொடர்ந்து கோவில் வெளிப்பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் எலுமிச்சம்பழம் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் கோயிலில் இருந்து மகாதானபுரம் நோக்கி அம்மனின் பரிவேட்டை ஊர்வலம் தொடங்கியது.

  ஊர்வலத்தின் தொடக்க நிகழ்ச்சியாக வெள்ளிக்குதிரை வாகனத்தில் அம்மன் கோயிலை விட்டு வெளியேவரும்போது,  காவல்துறையினரின் துப்பாக்கி ஏந்தய அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதில் தமிழக தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் மனோ தங்க ராஜ் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். மாலை  6 மணிக்கு மகாதானபுரத்தில் உள்ள பரிவேட்டை மண்டபத்தில்  பகவதி அம்மன் பாணாசூரகனை, வதம் செய்யும் பரிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது.

  இதில் கன்னியாகுமரி சுற்றுவட்டார பகுதி மக்கள் மட்டுமன்றி வெளியூர் மக்களும் கலந்து கொண்டு மேள தாளங்களுடன் வலம் வந்த கன்னியாகுமரி பகவதியம்மனை தரிசனம் செய்தனர். பரிவேட்டை நிகழ்ச்சியை ஒட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

  Also see... திருப்பதி : ஏழுமலையான் கோவில் பிரமோற்சவம் கொடி இறக்கத்துடன் நிறைவு

  மேலும் நாகர்கோவில், கொட்டாரம், அஞ்சுகிராமம், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இருந்து பரிவேட்டை திருவிழா நடக்கும் மகாதானபுரத்துக்கு அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

  செய்தியாளர்: ஐ.சரவணன் , நாகர்கோவில்   

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Kanniyakumari, Navarathri