Home /News /kanniyakumari /

கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பின் குமரியில் களைகட்டிய ஓணம் பண்டிகை

கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பின் குமரியில் களைகட்டிய ஓணம் பண்டிகை

ஓணம் பண்டிகை

ஓணம் பண்டிகை

Kanniyakumari | கேரளா எல்லையை ஒட்டிய மீனச்சல் , குழித்துறை, ஆற்றூர் உட்பட பல்வேறு இடங்களில் கேரளா கலாசார நிகழ்ச்சிகளுடன் ஓணம்பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanniyakumari, India
கேரளாவில் ஓணம்பண்டிகை வெகுவிமர்சையாக 10 நாட்கள் கொண்டாடபட்டு வருகிறது. இதையடுத்து கேரளாவையொட்டியுள்ள குமரி  மாவட்டத்தில் மலையாள மக்கள் அதிகம் வசித்து வரும் பகுதிகளில்  ஓணம்பண்டிகை  கொண்டாடபடுவது வழக்கம். எனினும்  கொரோனா நோய்தொற்று ஊரடங்கால் கடந்த இரண்டு ஆண்டுகள் ஓணம்பண்டிகை கேரளாவை போல் குமரியிலும் களையிழந்து காணபட்டது.

இந்நிலையில் இந்த ஆண்டு குமரி மாவட்டத்தில்  ஓணம்பண்டிகை  களைகட்ட துவங்கி இன்று திருவோணம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.  அதன் ஒரு பகுதியாக மீனச்சல், குழித்துறை  ஆற்றுர் உள்ளிட்ட பகுதிகளில்  மலையாள மொழி மக்களின் கலாசார நிகழ்ச்சிகளான மோகினியாட்டம் திருவாதிரைகளி வள்ளங்களி, தெய்யம் , சிங்காரி மேளம்  ஆகிய நிகழ்ச்சிகள் மற்றும் ஊர்வலங்கள்  பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

மாவேலி மன்னர் வேடம் பூண்டு வீடு வீடாக மக்களுக்கு ஓணம் வாழ்த்துக்கள் கூறி மகிழ்விக்கும் ஊர்வலன்களும் நடைபெற்று வருகிறது.  இதே போல் கோவில்கள் , பொது இடங்கள், வீடுகளில்  அத்தப்பூ போட்டியும் நடைபெற்றது.

Also see... தமிழகத்தில் செப்டம்பர் 3வது வாரத்தில் கனமழைக்கு வாய்ப்பு

மேலும் மதியம் ஓண சத்திய என்ற அறுசுவை உணவு குடும்பங்கள் ஒன்றிணைந்து சாப்பிடுவதும் முக்கியமான நிகழ்வாக வீடுகளில் நடைபெறும். குமரி மாவட்டத்திற்கு திருவோணம் பண்டிகையை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Kanniyakumari, Kerala, Onam

அடுத்த செய்தி