ஹோம் /நியூஸ் /கன்னியாகுமரி /

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 24 மணிநேரம் தண்ணீரில் மிதந்த மூதாட்டி... உயிருடன் மீண்ட அதிசய சம்பவம்..!

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 24 மணிநேரம் தண்ணீரில் மிதந்த மூதாட்டி... உயிருடன் மீண்ட அதிசய சம்பவம்..!

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி உயிர் பிழைத்த புஷ்பபாய்

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி உயிர் பிழைத்த புஷ்பபாய்

Kanniyakumari News : மூதாட்டி விழுந்த இடத்திலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில்  திக்குறிச்சி பகுதியில் மூங்கில்  கூட்டத்தினுடைய ஆற்றில் உடல் மிதப்பது போன்று தெரிந்ததை தொடர்ந்து அதன் அருகில் சென்று பார்த்தபோது மாயமான புஷ்பபாய் என்பது தெரியவந்தது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanniyakumari, India

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே ஆற்றில் குளிக்க சென்ற பெண் தண்ணீரில்  மூழ்கி மாயமான நிலயில் 1 நாளுக்கு பிறகு 7 கிலோ மீட்டர் தொலைவில் தீயணைப்பு  துறையினரால் உயிருடன் மீட்பு   மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே பாரதபள்ளி மடத்துவிளை பகுதியை சேர்ந்தவர் தங்கமணி. பந்தல் கட்டும் தொழிலாளி. இவரது மனைவி புஷ்பபாய்(60), இவர் அருகில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஆற்றில் மூழ்கி மாயமானார்.

இதையடுத்து அப்பகுதியினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த குலசேகரம் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் ஆற்றில் குளிக்க சென்று மாயமான மூதாட்டியை தேடிவந்த நிலையில்  நேற்று  காலை 30 பேர் கொண்ட தீயணைப்பு துறையினர் 3 குழுக்களாக பிரிந்து தேடிவந்தனர்.

இதையும் படிங்க : திமுக அரசு அதிகாரிகளை ஏவி விடுகிறது... எங்களுக்கும் ஆள் பலம் இருக்கிறது! - அண்ணாமலை பேட்டி

அப்போது மூதாட்டி விழுந்த இடத்திலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில்  திக்குறிச்சி பகுதியில் மூங்கில்  கூட்டத்தினுடைய ஆற்றில் உடல் மிதப்பது போன்று தெரிந்ததை தொடர்ந்து அதன் அருகில் சென்று பார்த்தபோது மாயமான புஷ்பபாய் என்பது தெரியவந்தது.

மேலும் அந்த உடலில் உயிர் இருப்பதை தெரிந்து கொண்ட தீயணைப்பு துறையினர் புஷ்பபாயை மீட்டு மார்த்தாண்டம் பகுதியிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் தனது தாயை உயிருடன் மீட்ட தீயணைப்பு துணையினருக்கு புஷ்பபாயின் மகன் ரமேஷ் நன்றி தெரிவித்தார்.

இதையும் படிங்க : சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இந்த பொருட்கள் எடுத்து செல்ல தடை... தேவசம்போர்டு அறிவிப்பு...

ஆற்றில் விழுந்து மாயமாகி ஒரு நாள் மூழுவதும் தண்ணீரில் மூழ்கிய நிலையில் உயிருடன் மூதாட்டி மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியினரை ஆனந்தத்தில் ஆழ்த்தியது.

Published by:Karthi K
First published:

Tags: Kanniyakumari