முகப்பு /செய்தி /கன்னியாகுமரி / சுட்டெரிக்கும் வெயில்... திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

சுட்டெரிக்கும் வெயில்... திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

திற்பரப்பு அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்

திற்பரப்பு அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்

Thirparappu falls | கோடை காலம் நெருங்கிய நிலையில் பொதுமக்கள் குளுமையான இடங்களை தேடி சென்று பொழுதை கழித்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanniyakumari (Kanyakumari), India

சுட்டெரிக்கும் கோடை வெப்பத்தை தணிக்க  குமரி திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

தற்போது கோடை காலம் துவங்கியுள்ளதால் ஏராளமான பொதுமக்கள் விடுமுறை நாட்களில் சுற்றுலா தலங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில் குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் ஞாயிறு விடுமுறை நாளான நேற்று காலை முதல் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பணிகள் வந்து செல்கின்றனர். கோதை ஆற்றில் தற்போது தண்ணீரின் அளவு குறைந்துள்ளதால் அருவியில் கொட்டும் தண்ணீரின் அளவு குறைந்துள்ளது , இருந்தாலும் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் அந்த அருவியில் கொட்டும் மிதமான தண்ணீரில் நீண்ட நேரம் நீராடி மகிழ்வதுடன் அருகில் உள்ள நீச்சல் குளத்திலும் நீராடி மகிழ்ந்து வருகின்றனர்.

அது போல அருவியின் மேற்பகுதியில் உள்ள சுற்றுலா படகு துறையிலும் படகு சவாரி செய்து இயற்கையின் அழகை ரசித்து வருகின்றனர்.

First published:

Tags: Falls, Kanniyakumari, Local News, Tourist spots