சவால் விட்ட சர்க்கஸ் வீரரை தோற்கடித்து 'கெத்து' காட்டிய கன்னியாகுமரி கல்லூரி மாணவர்
சவால் விட்ட சர்க்கஸ் வீரரை தோற்கடித்து 'கெத்து' காட்டிய கன்னியாகுமரி கல்லூரி மாணவர்
சவாலில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவர்
Kanniyakumari District : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஆப்பிரிக்க நாட்டு சர்க்கஸ் சாகச வீரருக்கு கிடைத்த இரண்டாவது அதிர்ச்சி, மீண்டும் சவால் விட்ட சர்க்கஸ் வீரரை தோற்கடித்த கல்லூரி மாணவர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தற்போது இந்தியாவிலேயே மிகப் பழமையான சர்க்கஸ்களில் ஒன்றான ஜம்போ சர்க்கஸ் நடைபெற்று வருகிறது. இந்த சர்க்கஸில் பல்வேறு வகையிலான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக சாகச நிகழ்ச்சி, கோமாளிகளின் நகைச்சுவை நிகழ்ச்சி, மிருகங்களின் சாகசங்கள், ஜிம்னாஸ்டிக் உள்ளிட்ட பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் இந்த சர்க்கஸில் நடைபெறுகிறது. சிறந்த பயிற்சி பெற்ற சர்க்கஸ் கலைஞர்களால் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சர்க்கஸ் நிகழ்ச்சியில் சுமார் 80 கிலோ எடை கொண்ட கெட்டில் பெல் எனப்படும் வித்தியாசமான உடற்பயிற்சி கருவியை தென் ஆபிரிக்காவை சேர்ந்த சாகச வீரர் ஒருவர் தனது கைகளாலும் , பல்லாலும் கடித்து தூக்கி சாதனை நிகழ்த்தி வருகிறார். இந்நிகழ்ச்சியின் போது திடீரென இந்த ஊரில் இந்த கருவியை தூக்குவதற்கு யாராவது உள்ளீர்களா என சவால் விடுத்தார்.
தென் ஆப்பிரிக்க சர்க்கஸ் கலைஞர்..
அச்சமயம் சர்க்கஸ் நிகழ்ச்சியை தனது குடும்பத்தினருடன் காண வந்திருந்த கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சு கிராமம் அருகே ஜேம்ஸ் டவுன் பகுதியைச் சேர்ந்த பிரேவ் மேன் ஹார்ட் என்ற கல்லூரி மாணவர், நீண்ட நேரமாக சர்க்கஸ் வீரர் சவால் விடுத்ததை பொறுக்க முடியாமல் சவாலை ஏற்ற மாணவர் முதல் முயற்சியிலேயே அந்த 80 கிலோ கருவியை தூக்கி அசத்தினார்.
இதனை கண்ட அங்கு குழுமியிருந்த மக்கள் கைதட்டி பாராட்டினர்.
ஏற்கனவே இந்த சர்க்கஸில் சாகச வீரர் கூட்டத்திலிருந்து யாராவது வந்து தூக்க முடியுமா என சவால் விட்ட நிலையில் கண்ணன் என்பவர் இந்த சவாலை ஏற்று அவரது சவாலை முறியடித்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் சர்க்கஸ் வீரரின் சவாலை அசால்ட்டாக மாணவர் ஒருவர் முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குமரி கல்லூரி மாணவர் பிரேவ் மேன் ஹார்ட்,..
இந்த நிகழ்வை மாணவருடன் வந்த நண்பர்கள் வீடியோ எடுத்து தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.