முகப்பு /செய்தி /கன்னியாகுமரி / மாந்திரீகம் செய்வதாக 13வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. குமரியில் மந்திரவாதி கைது

மாந்திரீகம் செய்வதாக 13வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. குமரியில் மந்திரவாதி கைது

மந்திரவாதி கைது

மந்திரவாதி கைது

Crime News: நாகர்கோவிலில் 13வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மந்திரவாதியை போக்சோ சட்டத்தில் போலீஸார் கைது செய்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Nagercoil, India

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கலுங்கடி பகுதியை சேர்ந்தவர் மந்திரவாதி மணிகண்டன் (வயது 35). கடந்த சில மாதங்களுக்கு முன் நாகர்கோவிலை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவர் தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என மந்திரவாதியை அணுகியுள்ளார். தங்களது குடும்பத்துக்கு யாராவது செய்வினை வைத்துவிட்டார்கள் என கேட்டு மந்திரவாதியை அணுகியுள்ளர்.

இதனையடுத்து உங்கள் வீட்டில் பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் அப்படி செய்தால் உன் மனைவிக்கு பிடித்த நோய் விலகும் எனக்  கூறியுள்ளார். மந்திரவாதியின் பேச்சை கேட்ட கூலித்தொழிலாளி வீட்டில் மாந்திரீக பூஜைகள் செய்ய ஒப்புக்கொண்டுள்ளார். இதன்காரணமாக மந்திரவாதி மணிகண்டன் சம்பந்தப்பட்டவர் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு  கூலித்தொழிலாளியின் 13 வயது மகள் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மணிகண்டன் சிறுமியிடம் பேச்சுக் கொடுத்துள்ளார். மணிகண்டன் அடிக்கடி வீட்டிற்கு வரும் நபர் என்பதால் சிறுமியும் வீட்டிற்குள் அழைத்து பேசியுள்ளார். வீட்டில் யாரும் இல்லாததை அறிந்துக்கொண்ட மணிகண்டன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறி கண்ணீர் விட்டுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மணிகண்டன் மீது நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்ட போலீஸார் மந்திரவாதி மணிகண்டனை கைது செய்தனர். மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

செய்தியாளர்: சரவணன் (நாகர்கோவில்)

First published:

Tags: Crime News, Kanyakumari, Local News, Nagercoil, Sexual abuse, Sexual harassment, Tamil News